பிரான்சில் 2300 பேரின் உயிரைக் காப்பாற்றிய கொரோனா! எப்படி தெரியுமா?
பிரான்சில் கொரோனா வைரஸால் போடப்பட்ட ஊரடங்கு காரணமாக 2300 பேரின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது.
சீனாவில் பரவிய கொரோனா வைரஸ், பிரான்சில் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து, கடந்த 2020-ஆம் ஆண்டின் வசந்த காலத்தில் ஊரடங்கு கொண்டுவரப்பட்டது.
இதன் காரணமாக பிரான்ஸே முற்றிலும் முடங்கியதால், போக்குவரத்து முற்றிலும் தடைப்பட்டது.
இதனால் காற்றில் மாசடைவு கனிசமாக குறைந்து, வளியில். அதாவது எரிபொருள் மூலம் காற்று மாசடைதல் குறைந்ததால், நைட்ரஜன் டை ஆக்சைடு (NO2) முற்றாக அழிந்திருந்தது.
இதனால் வளிமண்டல தூய்மை 2.300-பேரின் உயிரை காப்பாற்றியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. Air et Santé எனும் வளி கண்காணிப்பாளர்கள் நிறுவனம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
கடந்த 2016-ஆம் ஆண்டு இருந்து 2019-ஆம் ஆண்டிற்குள் பிரான்சில் வளி மாசடைவால் 40,000 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதை வைத்து கணக்கிடும் போது 2020-ஆம் ஆண்டின் வசந்த காலத்தில் ஏற்பட்ட கொரோனா உள்ளிருப்பால் 2300 பேர் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.