கொரோனாவால் பிரான்சில் பொருட்களுக்கு தட்டுப்பாடு: என்னென்ன பொருட்கள்?
உலகம் முழுவதும் கொரோனா, பொருட்கள் விநியோகம் மீது கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனால் பொருட்கள் தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வு ஆகிய பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன.
அவ்வகையில், பிரான்சில் என்னென்ன பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது, என்னென்ன பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படலாம் என்பதைப் பார்க்கலாம்.
காலணிகள் மற்றும் உடைகள்
2021இல் பெருமளவில் மரச்சாமான்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கும் IKEA நிறுவனம், அது 2022இலும் தொடரலாம் என எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளது.
கம்ப்யூட்டர்கள், டேப்லட்கள் மற்றும் மின்னணு உபகரணங்கள்
மின்னணு உபகரணங்களில் பயன்படுத்தப்படும் உப பொருட்கள், வியட்நாம் பொன்ற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன.
கொரோனாவால் அந்த நாடுகள் முடங்கியதால் ஏற்பட்ட தாக்கம், மின்னணு உபகரணங்கள் தட்டுப்பாட்டுக்கு வழிவகுத்துள்ளது.
சைக்கிள்கள்
சைக்கிள் தயாரிப்புக்குத் தேவையான 80 சதவிகிதம் பொருட்கள் வெவ்வேறு இடங்களிலிருந்து ஆர்டர் செய்யப்படும் நிலையில், சைக்கிள்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அது மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விளையாட்டு உபகரணங்கள்
பனிச்சறுக்கு காலணிகள் மற்றும் விளையாடும்போது அணியும் காலணிகளுக்கு கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன் தட்டுப்பாடு ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொம்மைகள்
கிறிஸ்துமஸ் நேரத்தில் பொம்மைகளுக்கு வழக்கத்தை விட அதிக தட்டுப்பாடு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
காகிதம்
அதிகரிக்கும் விலை மற்றும் காகிதக் கையிருப்பு குறைவு ஆகியவற்றின் தாக்கம் பார்சல் செய்வது, பைகள் மற்றும் சுகாதாரப் பொருட்கள் ஆகியவற்றை பாதித்துள்ளது.
அதன் காரணமாக ஏற்பட்டுள்ள விலை உயர்வு 2022 வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுபோக, பாய்லர்கள், கட்டுமானப் பொருட்கள், மட்டுமின்றி உணவுப்பொருட்களையும் கொரோனாவின் தாக்கம் பாதித்துள்ளதாக கூறப்படுகிறது.