சுவிட்சர்லாந்தில் மோசமாகும் கொரோனா நிலைமை... புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமா?: அமைச்சர் தகவல்
சுவிட்சர்லாந்தில் கொரோனா தொற்றுக்கு ஆளாகுவோர் எண்ணிக்கை புதிய உச்சம் தொட்டுள்ள நிலையிலும், புதிதாக கொரோனா கட்டுப்பாடுகள் எதையும் விதிக்கப்போவதில்லை என அரசு முடிவு செய்துள்ளது.
சுவிட்சர்லாந்தில் Omicron வகை கொரோனா வைரஸ் பரவல் நிலைமை எப்படி உள்ளது என்பதன் அடிப்படையில் புதிய கட்டுப்பாடுகள் குறித்து முடிவு செய்யப்படும் என திங்கட்கிழமையன்று அரசு அறிவித்தது.
இந்நிலையில், நேற்று புதிதாக கட்டுப்பாடுகள் விதிப்பதற்கு எதிராக அரசு முடிவெடுத்துள்ளது. அதன்படி, தற்போதைக்கு புதிதாக கொரோனா கட்டுப்பாடுகள் எதுவும் விதிக்கப்படப்போவதில்லை என்று அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து நேற்று மாகாண சுகாதார இயக்குநர்களிடம் பேசிய சுவிஸ் சுகாதாரத்துறை அமைச்சரான Alain Berset, இப்போதைக்கு புதிதாக எந்த கொரோனா கட்டுப்பாடுகளும் விதிக்கப்படப்போவதில்லை என்றும், அதே நேரத்தில், நிலைமை மோசமாகத்தான் உள்ளது என்றும் கூறியுள்ளார்.
Habe mich erneut mit @GDK_CDS-Präsident Lukas Engelberger und weiteren Gesundheitsdirektorinnen und -direktoren telefonisch ausgetauscht. Die Situation ist wegen Omikron sehr angespannt. Spitäler haben noch Kapazität, müssen sich aber auf mehr Akutfälle vorbereiten. #CoronaInfoCH
— Alain Berset (@alain_berset) January 5, 2022
ஆகவே, கட்டுப்பாடுகள் குறித்து திட்டமிடப்பட்டுள்ளது என்றும், எதிர்காலத்தில் நிலைமை தொடர்ந்து மோசமானால், அவை அமுல்படுத்தப்படலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
புதன்கிழமை நிலவரப்படி, சுவிட்சர்லாந்தில் 30,000 பேர் புதிதாக கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளார்கள்.
சுவிட்சர்லாந்தில், இப்படி ஒரே நாளில் 30,000 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாவது இதுவே முதன்முறையாகும்.
செவ்வாயன்று 20,000க்கும் அதிகமானோருக்கு புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. சுவிட்சர்லாந்தில் ஒரே நாளில் 20,000 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்படுவதும் இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.