பிரிட்டனை மிரட்டும் கொரோனா வைரஸ்! ஒரே நாளில் இவ்வளவு பாதிப்பா? வெளியான அதிர்ச்சி தகவல்
பிரித்தானியாவில் டெல்டா கொரோனா வைரஸ் அதி வேகமாக பரவி வருவதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.
கடந்த ஆண்டு சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் ஓராண்டு கழிந்தும் உலக நாடுகளை ஆட்டி படைத்து வருகின்றது. சில நாடுகளில் 5வது அலை தொடங்கிவிட்டதாக நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.
இங்கிலாந்தில் டெல்டா வைரஸ் அதிகரித்து வரும் நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக சுமார் 39,329 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
அந்த வகையில் இதுவரை தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 94,06,001 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பு காரணமாக மேலும் 214 பேர் உயிரிழந்துள்ளனர்.
இங்கிலாந்தில் கொரோனா பாதிப்பில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 34,490 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டநிலையில் இதுவரை 77 லட்சத்து 022 பேர் குணமடைந்துள்ளனர்.
தற்போது கொரோனா பாதிப்புடன் 15,63,641 பேர் சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. பிரிட்டனில் இதுவரை 1 லட்சத்து 42, 338 பேர் கொரோனவுக்கு பலியாகியுள்ளனர்.