கொரோனா பரிசோதனைகளை இலவசமாக வழங்க கூடாது: சுவிஸ் அமைச்சர் அந்தர் பல்டி
கொரோனா பரிசோதனை செய்துவிட்டால் போதும், தாங்கள் பாதுகாப்பாக இருக்கிறோம் என்ற எண்ணம் மக்களுக்கு வந்துவிட்டதால், இனி கொரோனா பரிசோதனைகளை இலவசமாக வழங்ககூடாது என்று சுவிஸ் அமைச்சர் ஒருவர் கூறியுள்ளார்.
ஜெனீவா மாகாண சுகாதாரத்துறைக்கான கவுன்சிலராக இருக்கும் Mauro Poggia, இலவசமாக கொரோனா பரிசோதனைகள் வழங்குவதை நிறுத்திக்கொள்வது, அதிக எண்ணிகையில் இளைஞர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வழிவகை செய்யும் என்கிறார்.
ஜெனீவாவில் கொரோனா பரவல் அதிகரித்து, இப்போது நாட்டிலேயே அதிக அளவு கொரோனா பரவல் உள்ள மாகாணமாகிவிட்டது ஜெனீவா.
இப்போது இலவச பரிசோதனைகள் வழங்கக் கூடாது என்று கூறும் இதே Mauro Poggia, மே மாதத்தில், மக்களுக்கு இலவசமாக கொரோனா பரிசோதனைகளை வழங்கவேண்டும் என்று வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.