ஐபிஎல் 2021: பெங்களூர் அணியைச் சேர்ந்த பிரபல அவுஸ்திரேலியா வீரருக்கு கொரோனா!
பெங்களூர் அணியைச் சேர்ந்த பிரபல அவுஸ்திரேலியா ஆல்-ரவுண்டர் டேனியல் சாம்ஸிக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
2021 ஐபிஎல் தொடர் ஏப்ரல் 9ம் திகதி சென்னையில் தொடங்குகிறது. முதல் லீக் போட்டியில் மும்பை-பெங்களூர் அணிகள் மோதுகின்றன.
இந்நிலையில், இந்தியாவில் மீண்டும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் ஐபிஎல் போட்டி நடக்குமா என ரசிகர்களிடையே சந்தேகம் எழுந்துள்ளது.
எனினும், திட்டமிட்ட படி ஐபிஎல் 2021 தொடர் நடக்கும் என பிசிசிஐ தலைவர் கங்குலி சமீபத்தில் தெரிவித்தார், இருப்பினும் போட்டிகள் ரசிகர்களின்றி நடக்கும் என கூறப்படுகிறது.
இந்நிலையில், ஐபிஎல் தொடரில் விளையாட அவுஸ்திரேலியாவிலிருந்து வந்து ஹோட்டலில் தனிமைப்படுத்தலில் இருந்து பெங்களூர் வீரர் டேனியல் சாம்ஸிக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.
சாம்ஸிக்கு இதுவரை எந்த அறிகுறியயும் இல்லை என்றும், மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பெங்களூர் அணி தரப்பில் தெரிவித்துள்ளது.
2020 துபாயில் நடந்த தொடரில் டெல்லி அணிக்காக ஐபிஎல்-லில் அறிமுகமான டேனியல் சாம்ஸ், தற்போது பெங்களூர் அணியில் இடம்பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
