டார்க்நெட்டில் விற்கப்படும் கொரோனா தடுப்பூசிகள்! ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி தகவல்
கொரோனா தடுப்பூசிகள், தடுப்பூசி பாஸ்போர்ட் மற்றும் எதிர்மறையாக சோதனை செய்ததற்காக போலி சான்றிதழ்கள் டார்க்நெட்டில் விற்பனை செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கள்ளச் சந்தை போலவே இணையத்தின் கறுப்பு பக்கமே Darkweb அல்லது Darknet என அழைக்கப்படுகிறது.
டார்க் வெப் மூலம் போதைப் பொருட்கள் உட்பட சட்டவிரோதமான பொருட்கள் விற்கப்படுகின்றன. இந்நிலையில், கொரோன அத்தடுப்பூசிகளும் இணையத்தில் கள்ளத்தனமாக விற்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அஸ்ட்ராஜெனெகா, ஸ்பூட்னிக் வி, சினோபார்ம், ஜான்சன் & ஜான்சன் என அனைத்து நிறுவனங்களின் தடுப்பு மருந்துகளும், 500 டொலர் முதல் 750 டொலர் வரை விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
அதேபோல், 150 டொலருக்கு போலி தடுப்பூசி சான்றிதழ்கள் வழங்கப்படுவதாக தெரியவந்துள்ளது.
தடுப்பூசி சான்றிதழ் இருந்தால் அனுமதி உள்ள பல நாடுகளுக்கு தடையின்றி பயணிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
தடுப்பூசி தொடர்பான டார்க்நெட் விளம்பரங்கள் அதிகரித்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர், அதே நேரத்தில் தடுப்பூசிகள் உண்மையானவை என்பதற்கும் எந்த ஆதாரமும் இல்லை என கூறப்படுகிறது.
தடுப்பூசிகளை விற்பவர்கள் அமெரிக்கா, இங்கிலாந்து, ஸ்பெயின், ஜேர்மனி, பிரான்ஸ் மற்றும் ரஷ்யாவைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.