இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2.86 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2.86 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
தற்போது வரை பெருந்தொற்றில் இருந்து 3.06 லட்சம் பேர் மீண்டுள்ளனர். நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 573 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.
மேலும் தொற்றில் இருந்து 3,06,357 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 22,02,472 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
தினசரி பாதிப்பு சதவீதம் சிறிதளவு உயர்ந்து 19.59 என்ற அளவில் உள்ளது. வாராந்திர பாதிப்பு சதவீதமானது 17.75 என்ற அளவில் உள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரையில் கடந்த 24 மணி நேரத்தில் 29,976 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 47 பேர் உயிரிழந்துள்ளனர்.