பிரான்ஸை மிரட்டும் கொரோனா வைரஸ்! ஒரே நாளில் இவ்வளவு பாதிப்பா? வெளியான முழு விவரம்
பிரான்ஸ் நாட்டில் கொரோனா வைரஸ் அதிகரித்து வரும் நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 1.22 லட்ச நபர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கொரோனாவை தொடர்ந்து Omicron வைரஸ் உலகை உலுக்கி வருகின்றது. கடந்த மாதம் 24ஆம் திகதி தென் ஆப்பிரிக்காவில் Omicron வைரஸ் முதலில் கண்டறியப்பட்டது.
இந்நிலையில் இந்த வைரஸ் சுமார் 110-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ளது. ஐரோப்பியா, ஆப்பிரிக்கா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் கொரோனா தொற்று அதிகரிக்க Omicron திரிபுதான் காரணம் என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் வரிசையில் பிரான்ஸ் 7-வது இடத்தில் உள்ளது.
அந்த வகையில் பிரான்ஸ் நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது.
இதையடுத்து கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 90.88 லட்சத்தைக் கடந்துள்ளது. அங்கு கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1.22 லட்சத்தைத் தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.