கொரோனா தொற்றால் 1 லட்சம் பேர் உயிர் இறக்கும் அபாயம்! நிபுணர்கள் கடும் எச்சரிக்கை
கொரோனா வைரஸ் தொற்றால் உலகளவில் மேலும் 100,000 பேர் உயிர் இறக்க நேரிடும் என்று ஆய்வில் வெளியகியுள்ளது.
கடந்த ஆண்டு சீனா வுஹான் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று வரை உலகம் முழுவதும் ஆட்டி படைத்து வருகின்றது. ஓராண்டு கடந்த நிலையிலும் அதனின் வீரியம் குறைந்தபாடில்லை.
இந்நிலையில் உலகம் நாடுகளில் வேகமாக பரவி வரும் நான்காவது அலையை தடுக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் எடுக்காவிட்டால் மேலும் 1 லட்ச மக்கள் உயிர் இறக்க நேரிடும் என்று ஜேர்மனியின் சிறந்த நிபுணர் கிறிஸ்டியன் ட்ரோஸ்டன் தெரிவித்துள்ளார்.
ஜேர்மனியில் ஒரு நாளில் சுமார் 40,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். லீப்ஜிக் பல்கலைக்கழக மருத்துவமனையில் கோவிட் வார்டின் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள மருத்துவர்கள், நான்காவது அலை இன்னும் மோசமானதாக இருக்கலாம் என்று எச்சரித்துள்ளனர்.
ஜேர்மனியில் 100,000 பேருக்கு 459 நோய்த்தொற்றுகள் என்ற விகிதத்தில் சாக்சோனி மாநிலத்தில் ஏழு நாட்களில் இல்லாத அளவுக்கு மிக அதிக தொற்று வீதம் பதிவாகியுள்ளது.
இந்நிலையில் தடுப்பூசி போடாதவர்கள், பார்கள், உணவகங்கள், பொது நிகழ்வுகள் மற்றும் விளையாட்டு மற்றும் கேளிக்கைக்கான இடங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
12 வயதுக்கு மேற்பட்ட பதினாறு மில்லியன் ஜெர்மானியர்கள் இன்னும் முழுமையாக தடுப்பூசி போடவில்லை என்று கண்டறியப்பட்டுள்ளது.