30க்கும் மேற்பட்ட மாறுபாடுகளைக் கொண்ட கொரோனா வைரஸ்: கனடாவிலும் கண்டுபிடிப்பு
கொரோனாவைரஸ் தொற்று முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அதன் பல்வேறு மாறுபாடுகள் தொடர்ந்து கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன.
அவ்வகையில், மீண்டும் ஒரு கொரோனாவைரஸ் மாறுபாடு உலகில் பரவத் துவங்கியுள்ளது. அது கனடாவிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பிரோலா வைரஸ்
அந்த புதிய கொரோனாவைரஸ் மாறுபாடு BA.2.86 அல்லது ‘Pirola’ என அழைக்கப்படுகிறது. இந்த வைரஸ் எந்த அளவுக்கு மோசமானது என்பது தெரியவில்லை. பிரச்சினை என்னவென்றால், இந்த பிரோலா வைரஸ் தனது புரத அமைப்பில் 30க்கும் மேற்பட்ட மாறுபாடுகளைக் கொண்டுள்ளது.
ஆகவே, அது மிக வேகமாக பரவக்கூடும் என்பதுடன், அது ஏற்கனவே கொடுக்கப்பட்ட தடுப்பூசியின் தாக்கத்தைத் தாண்டி தொற்றை ஏற்படுத்திவிடக்கூடும் என்னும் விடயம் அச்சத்தை உருவாக்கியுள்ளது.
ஒமிக்ரான் வைரஸ் மிதமானது என்று கூறப்பட்டது. ஆனால், அதுவும் ஏராளம் உயிர்களை பலிகொண்டுவிட்டது. ஆக, இந்த பிரோலா வைரஸ் எப்படி இருக்கும் என்பது குறித்து எதுவும் கூறுவதற்கில்லை.
கனடாவின் எந்த பகுதியில் இந்த வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது?
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் வாழும் ஒருவருக்கு இந்த BA.2.86 மாறுபாடு தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக செவ்வாய்க்கிழமையன்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
The World Economic Forum
விடயம் என்னவென்றால், அந்த நபர் கனடாவை விட்டு அல்ல, மாகாணத்தை விட்டே வெளியே எங்கும் செல்லவில்லை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |