இங்கிலாந்தில் புதிய உச்சத்தை அடைந்த கொரோனா பாதிப்பு! ஒரேநாளில் புதிதாக 1,22,186 பேருக்கு தொற்று
இங்கிலாந்தில் கொரோனா பரவலால் ஏற்படும் பாதிப்புகள் நாளுக்குநாள் உயர்ந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன்படி இங்கிலாந்தில் அதிகபட்ச அளவாக ஒரேநாளில் புதிதாக 1,22,186 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இதன்மூலம் இதுவரை தொற்று பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,18,91,292 ஆக உயர்ந்தாகவும், பாதிப்பு காரணமாக மேலும் 137 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 47 ஆயிரத்து 857 ஆக உயர்ந்துள்ளது.
அதுமட்டுமின்றி பாதிப்பில் இருந்து இதுவரை 99 லட்சத்து 61 ஆயிரத்து 369 பேர் குணமடைந்துள்ளனர்.
தற்போது கொரோனா பாதிப்புடன் 17,82,066 பேர் சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.