சுவிட்சர்லாந்தில் முதியோர் இல்லம் ஒன்றில் இறுகும் கட்டுப்பாடுகள்: 60 பேர் பாதிப்பு
சுவிட்சர்லாந்தின் Oberriet பகுதியில் அமைந்துள்ள முதியோர் இல்லத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
Oberriet பகுதியில் அமைந்துள்ள குறித்த முதியோர் இல்லத்தில் 43 முதியவர்களுக்கும் 25 ஊழியர்களுக்கும் தற்போது கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது இந்த மோசமான நிலைக்கு காரணம் என்ன என்பது தொடர்பில் அதிகாரிகள் தரப்பு விசாரணை முன்னெடுத்து வருகிறது. கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களை தனிமைப்படுத்தவும், சந்தேக நபர்களை அடையாளம் காணவும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மட்டுமின்றி, ஒவ்வொரு இரண்டு நாட்களுக்கு ஒருமுறை கொரோனா சோதனை ,முன்னெடுக்கவும் அதிகாரிகள் தரப்பில் இருந்து அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அக்டோபர் 22ம் திகதிக்கு பின்னர் மொத்தம் 60 பேர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 6 பேர்கள் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளனர்.
மேலும் கொரோனா பரவலை தடுக்கும் நோக்கில் பார்வையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதும், இன்னொரு அறிவிப்பு வெளியாகும் வரையில் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது.