இட்லி சாப்பிட்டால் கொரோனா வராதாம்; ஆராய்ச்சியின் முடிவு!
தற்போது இந்தியாவில் கொரோனா தொற்றும் மீண்டும் அதிகரித்துள்ளது.
இந்தியாவில் இப்போது வரை மொத்தம் 531,152 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.
ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் கொரோனா உயிரிழப்புகள் குறைந்துள்ளது.
இதற்கு நமது இந்திய உணவு முறையே காரணம் என ஆராய்ச்சிகள் மூலம் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து பிரேசில், ஜோர்டான், சுவிட்சர்லாந்து, சவுதி அரேபியா மற்றும் இந்தியாவைச் சேர்ந்த ஆய்வாளர்கள் ஆய்வை நடத்திவந்துள்ளனர்.
ஆராய்ச்சியின் முடிவு
இந்தியா, அமெரிக்கா, க்ரீஸ், ஸ்பெயின் நாடுகளில் பதிவான கொரோனா உயிரிழப்புகள் மற்றும் உணவுகள் குறித்து தகவல்களை சேகரித்துள்ளனர்.
காய்கறிகள், தானியங்கள், பருப்பு வகைகள், இறைச்சி, பால் பொருட்கள், மீன், ஆல்கஹால், காபி, பழங்கள், நட்ஸ்கள், தேநீர் மற்றும் மஞ்சள் ஆகியவை தான் அதிகமானோரால் சாப்பிடப்பட்டுள்ளது.
இந்தியர்கள் மற்றைய நாடுகளைவிடவும் பருப்பு வகைகள், காய்கறிகள், தானியங்களை உட்கொள்கின்றார்கள், ஆகவே கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தலாம் என்று முடிவு வெளிவந்துள்ளது.
இட்லியால் எப்படி கொரோனாவை கட்டுப்படுத்த முடியும்?
ஒரு இட்டிலியில் விட்டமின் மாத்திரைகளில் இருப்பதைப் போன்ற இரண்டு மடங்கு ஜின்க் இருக்கிறது.
மற்றும் மஞ்சளில் அதிகமான மருத்துவ குணங்கள் காணப்படுகின்றன.
இவை எல்லாம் சாப்பிட்டு தான் இந்தியாவில் கொரோனா உயிரிழப்புகளை வெகுவாக குறைத்துள்ளதாக கூறுகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.