சார்லஸ் மன்னர் முடிசூட்டு விழா... தனியாக வந்திறங்கிய இளவரசர் ஹரி
லண்டனில் சனிக்கிழமை முன்னெடுக்கப்படும் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழாவிற்காக இளவரசர் ஹரி தனி விமானத்தில் தனியாக வந்திறங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தனியாக வந்திறங்கிய ஹரி
ஃபார்ன்பரோ விமான நிலையத்தில் தனியார் விமானம் ஒன்று தரையிறங்கியுள்ள நிலையில், அது இளவரசர் ஹரியாக இருக்கவே அதிக வாய்ப்பு என கூறுகின்றனர்.
@thesun
தமது தந்தையின் முடிசூட்டு விழாவில் தனியாக கலந்துகொள்ளும் இளவரசர் ஹரி, தமது பிள்ளைகளை கவனித்துக்கொள்ளும் பொருட்டு மனைவி மேகனை அமெரிக்காவில் விட்டுவிட்டு வந்துள்ளார்.
உண்மையில், ஹரி - மேகன் தம்பதியின் பிள்ளைகளுக்கு முடிசூட்டு விழாவில் அழைப்பு விடுக்கப்படவில்லை என்பது மட்டுமின்றி, ராணியார் கமிலாவின் பேரப்பிள்ளைகள் விழாவில் பங்கேற்க உள்ளனர்.
இந்த நிலையில் விண்ட்சர் கோட்டைக்கு அருகாமையில் அமைந்துள்ள ஃபார்ன்பரோ விமான நிலையத்தில் ஹரியின் விமானம் தரையிறங்கியுள்ளது. கலிபோர்னியாவில் அமைந்துள்ள Van Nuys தனியார் விமான நிலையத்தில் இருந்து இளவரசர் ஹரி புறப்பட்டதாக தகவல் வெளியாகியிருந்தது.
முடிசூட்டு விழாவின் இறுதி கட்டத்தில்
தமது மகனின் நான்காவது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்துகொள்ளும் பொருட்டு, முடிசூட்டு விழாவின் இறுதி கட்டத்தில் ஹரி அமெரிக்கா புறப்படுவார் என்றே கூறப்படுகிறது.
Credit: © David Dyson
சார்லஸ் மன்னர் முடிசூட்டு விழாவில் ஹரியின் பங்கு என்ன என்பது தொடர்பில் இதுவரை எந்த உறுதியான தகவலும் வெளியாகவில்லை. மேகன் மெர்க்கல் முடிசூட்டு விழாவில் பங்கேற்கவில்லை என்ற தகவலே, பெரும்பாலான ராஜ குடும்பத்து உறுப்பினர்களுக்கு நிம்மதியை கொடுத்துள்ளது என கூறுகின்றனர்.
ஆனால் அது இன ரீதியான ஒதுக்குதல் என்றே மேகன் மெர்க்கல் ஆதரவு தரப்பு ராஜ குடும்பம் மீது முன்வைக்கும் குற்றச்சாட்டு.