கொரோனா வைரஸ் காது, மூக்கு, தொண்டையில் போன்றவற்றில் பாதிப்பு ஏற்படுத்துமா?
covid
corona virus
By Kishanthini
தற்போது கொரானா வைரஸ் அதிவேகமாக பல நாடுகளில் பரவி வருகிறது. தற்போது கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
இருப்பினும் இன்றுவரை மக்களுக்கு இவ்வைரஸ் பற்றி சந்தேகங்கள் எழுந்த வண்ணம் தான் உள்ளது.
அதில் சிலருக்கு காது, மூக்கு, தொண்டையில் கொரோனா வைரஸ் ஏற்படுத்தும் பாதிப்புகள் என்ற சந்தேகம் தோன்றுவதுண்டு.
இதுகுறித்து கடலூர் எஸ்.ஆர்.மருத்துவமனை காது, மூக்கு, தொண்டை சிறப்பு நிபுணர் டாக்டர் ஆர்.வெங்கட்டரமணன் சில தகவல்களை கூறியுள்ளார். அவை,
- மூக்கு ஒழுகுதல் (4.1.சதவீதம்), மூக்கு அடைப்பு, வாசனை தெரிவதில் பிரச்சினை போன்றவை மூக்கில் கொரானா வைரஸ் ஏற்படுத்தும் முக்கியமான பாதிப்புகளாக உள்ளது.
- வைரஸ் தொற்றில் இருந்து முற்றிலும் மீண்ட பிறகு ஒருவருக்கு வாசனையில் ஏற்படும் பாதிப்பு(40 சதவீதம்) பூரணமாக குணமடைவதை காணமுடிகிறது.
- தொண்டையில் புண்(11.3 சதவீதம்.) எரிச்சல், அடைப்பு, தொண்டை சதை வீக்கம்(டான்சில்ஸ்) போன்றவை பரவலாகப் ஏற்படுகிறது.
- தலைவலி, தலைபாரம், உடல் வறட்சி, சோர்வு, ஆகியவையும் ஏற்படுகிறது. இது தவிர நாக்கில் சுவை உணர்வில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
-
கொரோனா நோயாளிகளுக்கு வாசனை மற்றும் சுவையில் 40 சதவீதம் மாற்றம் உள்ளதாக அறிக்கை உள்ளது. சில நோயாளிகளுக்கு காது கேளாமை, காது மற்றும் மூளை நரம்புகள் பாதிப்பு உள்ளதால் காதுகேளாமை வரும் வாய்ப்புகளும் அதன் தாக்கமும் முற்றிலும் அறியப்படவில்லை.
3ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US