ஆசையை அடக்க முடியாத அவுஸ்திரேலிய பெண்ணிடம் பறந்து வந்த ட்ரோன்... ஒரு வித்தியாசமான செய்தி
அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து பகுதியில் அமைந்துள்ள ஹொட்டல் ஒன்றை நோக்கி ட்ரோன் ஒன்று பறந்து வருவதை ஹொட்டல் ஊழியர் ஒருவர் கவனித்துள்ளார்.
அது குறித்து அவர் பொலிசாருக்கு புகாரளிக்க, பொலிசார் விசாரணையில், அந்த ஹொட்டலில் தனிமைப்படுத்தலில் இருந்த ஒரு பெண்ணுக்கு அந்த ட்ரோன் சட்ட விரோதமாக சிகரெட் டெலிவரி செய்தது தெரியவந்தது. ஆகவே, ஹொட்டல் தனிமைப்படுத்தலின்போதும் சிகரெட் ஆசையை அடக்க முடியாத அந்த பெண்ணுக்கு 1,300 டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அந்த ட்ரோனை பறக்கவிட்ட ஒருவரும் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார். அவர் சட்ட விரோதமாக அந்த ட்ரோனை பறக்கவிட்டாரா என்பது குறித்து பொலிசார் விசாரித்துவருகிறார்கள். அவருக்கும் அபராதம் விதிக்கப்படலாம்.
அவுஸ்திரேலியாவில் ஹொட்டல் தனிமைப்படுத்தலில் இருப்போர், வெளியே இருந்து உணவு ஆர்டர் செய்து வாங்கி உண்ண அனுமதி உள்ளது. ஆனால், சிகரெட் வாங்க அனுமதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.