கொரோனா நோயாளிகள் பேசினால் வைரஸ் பரவும் அபாயம்! வெளியான அதிர்ச்சி தகவல்
கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் பேசினாலே நோய் பரவு அபாயம் இருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனாவின் 2ம் அலை கோரத்தாண்டம் ஆடிவரும் நிலையில், மத்திய அரசின் இந்த அறிவிப்பு மக்களை மேலும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதுதொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டு நெறிமுறைகளில், கொரோனா நோயாளிகள் தும்மிய அல்லது இருமிய பின்னர், எச்சிலின் சிறிய துகள்கள் காற்றில் பரவி இருந்தால், அதை சுவாசிப்பவர்களுக்கு நோய் தொற்று ஏற்படலாம்.
பாதிக்கப்பட்ட நபர் பேசும் போது கூட வெளிப்படும் எச்சிலில் இந்த துகள்கள் பரவுகின்றன, ஏரோசோல் என்ற எச்சிலின் சிறிய துகள்கள் காற்றில் 10 மீட்டர் தூரம் வரை பரவும்.
இந்த ஏரோசோல்கள் அதிக நேரம் உயிருடன் இருக்கும் என்பதால், காற்றில் இருந்து ஏரோசோல்கள் விழுந்த இடத்தை ஒருவர் தொட்டுவிட்டு தனது மூக்கையோ, கண்களையோ தொட்டால் அவர் பாதிக்கப்படும் ஆபத்து இருக்கிறது.
எனவே பொதுமக்கள் அனைவரும் முக கவசம் அணிவது கட்டாயம், அடிக்கடி கிருமிநாசினியால் கைகளை சுத்தம் செய்து கொண்டே இருக்க வேண்டும், காற்றோட்டம் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும் என எச்சரித்துள்ளது.