இந்த வாரம் சுவிட்சர்லாந்தில் புதிதாக கொரோனா தொற்றுக்கு ஆளானோரின் எண்ணிக்கை கணிசமாக குறைந்தது
சுவிட்சர்லாந்தில் இந்த வாரம் புதிதாக கொரோனா தொற்றுக்கு ஆளானோரின் எண்ணிக்கை 10,309 ஆகும்.
இது கடந்த வாரத்தை ஒப்பிடும்போது 31 சதவிகிதம் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த வாரம் சுவிட்சர்லாந்தில் புதிதாக கொரோனா தொற்றுக்கு ஆளானோரின் எண்ணிக்கை 15,024.
இந்த வாரத்தில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 35. முந்தைய வாரம் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 38ஆக இருந்தது. அதேபோல் இந்த வாரம் கொரோனா காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 223, இதுவே கடந்த வாரம் 300 ஆக இருந்தது.
கொரோனா தொற்றுக்கு ஆளாகுவோரில் தடுப்பூசி பெறாதவர்களே பெருமளவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்கள் அல்லது உயிரிழக்கிறார்கள். இந்த வாரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 90 சதவிகிதம் பேரும், உயிரிழந்தவர்களில் 69 சதவிகிதம் பேரும் தடுப்பூசி பெறாதவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.