பிரான்சில் 9 மில்லியன் மக்களின் தடுப்பூசி அட்டைக்கு சிக்கல்: சுகாதார அமைச்சர் எச்சரிக்கை
பிரான்சில் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொள்ளாத 9 மில்லியன் மக்களின் தடுப்பூசி அட்டை செயலிழக்கும் ஆபத்தில் இருப்பதாக சுகாதார அமைச்சர் அறிவித்துள்ளார்.
இது தொடர்பில், சுகாதார அமைச்சர் Olivier Veran தெரிவிக்கையில், பிப்ரவரி 15 ம் திகதி முதல், மூன்றாவது தடுப்பூசி போடாதவர்களின் தடுப்பூசி அட்டைகள் செயலிழக்கும் என தெரிவித்துள்ளார்.
இதனால் கிட்டத்தட்ட 9 மில்லியன் பிரெஞ்சு மக்களது தடுப்பூசி அட்டை செயலிழக்கும் அபாயத்தில் உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றுக்கான இரண்டாவது தடுப்பூசி போடப்பட்டு நான்கு மாதங்கள் நிறைவடைந்திருந்தால், அவர்கள் மூன்றாவது தடுப்பூசி போட ஏற்புடையவர்களாக கருதப்படுவர் எனவும் சுகாதார அமைச்சர் Olivier Veran தெரிவித்துள்ளார்.
மட்டுமின்றி, குறித்த தடுப்பூசி அட்டை இருந்தால் மட்டுமே பார்கள், உணவகங்கள், ரயில் சேவைகள் மற்றும் விமான சேவைகளை மக்கள் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.