நடிகர் விஜய் அலுவலகத்தில் வாயில் பரோட்டாவுடன் ஆண் சடலம்! பிரேத பரிசோதனையில் பரபர தகவல்
நடிகர் விஜய்யின் அலுவலகத்தில் நபர் ஒருவர் வாயில் பரோட்டாவுடன் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
சென்னை கிழக்கு கடற்கரை சாலை பனையூரில் நடிகர் விஜய்யின் அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் அலுவலகம் அமைந்துள்ளது. எளிதில் எவரும் உள்ளே ஏறி குதித்து புகுந்து விட இயலாத வகையில்10 அடி உயர கருங்கல் சுற்று சுவரில் பீங்கான் பதிக்கப்பட்டுள்ளது.
அந்த அலுவலகத்தில் உட்பகுதிகளை புதுமைபடுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. இங்கு பெயிண்டரான பிரபாகரன் என்பவர் கடந்த ஒரு மாத காலமாக பெயிண்ட் அடிக்கும் ஒப்பந்த ஊழியராக வேலை செய்து வந்தார்.
கடந்த சனிக்கிழமையன்று சம்பளத்தை பெற்று கொண்டு தன்னுடைய குடும்பத்தினரை காணச் சென்ற பிரபாகரன் சம்பவத்தன்று இரவு 8 மணியளவில் குடிபோதையில் நடிகர் விஜய்யின் அலுவலகத்திற்கு சென்றுள்ளார்.
அங்கிருந்த மேஸ்திரியிடம் தனக்கு பசிப்பதாகவும், புரோட்டா வாங்க 100 ரூபாய் தரும் படி கேட்டு பெற்று கொண்டு ஹொட்டலுக்கு சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மறுநாள் காலையில் அலுவலக வளாகத்தின் சுவறை ஒட்டிய உள்பகுதியில் கையிலும் வாயிலும் பரோட்டாவுடன் பிரபாகரன் இறந்து கிடந்ததை பார்த்து சக ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தகவல் அறிந்து வந்த பொலிசார் பிரபாகரனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை அறிக்கை குறித்து பொலிசார் கூறுகையில், குடிபோதையில் இருந்த பிரபாகரன் பரோட்டா சாப்பிட்டிருக்கிறார்.
அப்போது பரோட்டா மூச்சு குழாய் பாதை வழியாக சென்று நுரையீரல் பாதையை அடைந்ததால் பிரபாகரன் மூச்சு விட முடியாமல் உயிரிழந்தார் என தெரிவித்துள்ளனர்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
மரண அறிவித்தல்
திருமதி சிவபாக்கியம் நாகலிங்கம்
Kuala Lumpur, Malaysia, கொக்குவில் கிழக்கு, Scarborough, Canada
21 Jun, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
வைத்தியகலாநிதி நல்லதம்பி பத்மநாதன்
Kuala Lumpur, Malaysia, யாழ்ப்பாணம், London, United Kingdom, கொழும்பு
06 Jul, 2021
நன்றி நவிலல்
திரு சண்முகம் பாலசிங்கம்
வட்டுக்கோட்டை, காரைநகர் பாலக்காடு, Louvres, France, Dunstable, United Kingdom
26 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
Rev. அமரர். பத்மா சிவானந்தன்
சிங்கப்பூர், Singapore, அச்சுவேலி, Toronto, Canada, Victoria, Canada
24 Jun, 2021
மரண அறிவித்தல்
திரு கந்தையா ஞானேந்திரா
மலேசியா, Malaysia, இளவாலை, Florø, Norway, Enfield, United Kingdom
18 Jun, 2022