பிரித்தானியாவில் ஆற்றுக்குள் மிதந்த காரில் இருந்த பெண் மற்றும் ஆணின் சடலங்கள்! வெளிவரும் பின்னணி தகவல்
பிரித்தானியாவில் ஆற்றுக்குள் விழுந்த காரில் இருந்து ஆண் மற்றும் பெண் சடலங்களை பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.
பிரித்தானியாவின் Hoveringham கிராமத்தின் அருகில் உள்ள டிரண்ட் ஆற்றில் கார் ஒன்று மிதப்பதாக கடந்த 1ஆம் திகதி பொதுமக்கள் பொலிசாருக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து பொலிசார் காரை வெளியில் எடுக்கும் பணியில் இறங்கினார்.
ஆனால் நீரின் அளவு மிக அதிகமாக இருந்ததால் காரை மீட்கும் பணி மிக கடினமாக இருந்தது.
இந்த நிலையில் நீச்சல் வீரர்கள் உதவியுடன் கார் வெளியில் எடுக்கப்பட்ட நிலையில் அதன் உள்ளிருந்த ஆண் மற்றும் பெண் சடலங்களும் மீட்கப்பட்டது.
உயிரிழந்தவர்களின் சடலங்களின் முறையான அடையாளம் இன்னும் காணப்படவில்லை.
ஆனால் அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.