மறந்தும்கூட தயிரை இப்படி சாப்பிடாதீங்க: பயனுள்ள தகவல்
தயிர் சாப்பிடுவதற்கான சரியான முறையை பற்றியும், அதனால் ஏற்படும் நன்மைகள் பற்றியும் இந்த பதிவில் பார்க்கலாம்.
தயிர் ஒரு பிரபலமான ஆரோக்கியமான இயற்கை உணவு. இது சுவைக்காக மட்டுமல்லாமல் ஆரோக்கியமாகவும் இருக்கிறது. இதில், புரதம், கால்சியம், வைட்டமின்கள் மற்றும் ப்ரோபயாடிக்ஸ் உள்ளது.
இத்தனை நன்மைகள் இருக்கும் தயிரை நாம் சரியான முறையில் உட்கொள்ள வேண்டும். அதனை பற்றிய தகவலை தான் பார்க்க போகிறோம்.
சரியான முறை
* தயிரை நாம் உணவுடன் சேர்த்து சாப்பிட்டால் செரிமானத்திற்கு உதவியாக இருக்கும். அதேபோல ஊட்டச்சத்துக்களின் உறிஞ்சுதலையும் அதிகரிக்கிறது.
* தயிருடன் நாம் கூடுதலாக சர்க்கரை சேர்த்து சாப்பிட்டால் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும். ஏனெனில் தயிரில் சிறிது இனிப்பு கலந்திருக்கும்.
* தயிரை சாப்பிடும்போது அறை வெப்பநிலையில் சாப்பிடுங்கள். குளிர்ந்த தயிரை சாப்பிட்டால் செரிமான பிரச்சினைகள் வரலாம்.
* பழங்கள், காய்கறிகள் அல்லது தானியங்களுடன் கலந்து தயிரை சாப்பிடும்போது ஊட்டச்சத்து நிறைந்ததாக இருக்கும்.
* தினமும் நாம் தயிரை சாப்பிடுவதால் பல நன்மைகளை பெறலாம்.
தவறான முறை
* தயிரை நாம் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் செரிமான பிரச்சினைகள் ஏற்படுத்தும்.
* இரவில் நாம் தயிரை சாப்பிடும்போது கபம் மற்றும் சளி பிரச்சினைகளை ஏற்படுத்தலாம்.
* தயிரை சூடுபடுத்தி சாப்பிடும்போது அதில் உள்ள ப்ரோபயாடிக்ஸை அழிக்கிறது. இதனால், தயிரை சூடுபடுத்தாமல் சாப்பிட வேண்டும்.
என்னென்ன நன்மைகள்
* தயிரை சாப்பிடும்போது செரிமான பிரச்சனைகள் தீரும்.
* தயிரில் உள்ள வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
* தயிரில் உள்ள கால்சியம் எலும்புகளை வலுப்படுத்துகிறது.
* இதில் உள்ள மூலமான புரதம் எடையை குறைக்க உதவுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |