பிரான்ஸ் பெண் அமைச்சர் மீது ஊழல் குற்றச்சாட்டு
பிரான்ஸ் கலாச்சாரத்துறை அமைச்சர் மீது ஊழல் குற்றச்சாட்டு ஒன்று முன்வைக்கப்பட்ட நிலையில், அவர் விசாரணைக்குட்படுத்தப்பட உள்ளார்.
பெண் அமைச்சர் மீது ஊழல் குற்றச்சாட்டு
2007ஆம் ஆண்டு, ரச்சிதா டதி (Rachida Dati, 59) என்னும் பெண் பிரான்சின் நீதித்துறை அமைச்சராக பதவியேற்றார்.
பிரான்ஸ் நாட்டில் ஒரு இஸ்லாமியப் பெண்ணொருவருக்கு அவ்வளவு பெரிய பொறுப்பு கொடுக்கப்பட்டது அதுவே முதல்முறை.
அப்போது பிரான்ஸ் ஜனாதிபதியாக இருந்த நிக்கோலஸ் சார்க்கோஸி, பிரான்சிலுள்ள அனைத்துப் பிள்ளைகளுக்கும், கல்வியும் முயற்சியும் இருந்தால் எதுவும் சாத்தியமே என்னும் ஒரு செய்தியை தெரிவிப்பதற்காகவே ரச்சிதாவுக்கு நீதித்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டதாக தெரிவித்திருந்தார்.
ஆனால், ரச்சிதா ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது, Renault-Nissan கார் தயாரிப்பு நிறுவனத்துக்கு ஆதரவாக செயல்பட்டதாக ஒரு குற்றச்சாட்டு உள்ளது.
மேலும், சட்டத்தரணியாக செயல்பட்டதற்காக அந்நிறுவனக் கிளை ஒன்றிலிருந்து 900,000 யூரோக்கள் கட்டணம் பெற்றதாகவும் குற்றச்சாட்டு உள்ளது. ஆனால், அவர் அந்நிறுவனத்தில் எந்த பணியும் செய்யவில்லை.
ஆக, தற்போது பிரான்ஸ் கலாச்சாரத்துறை அமைச்சராக பதவி வகித்துவரும் ரச்சிதா மீது ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் முதலான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், அவர் விசாரணைக்குட்படுத்தப்பட இருக்கிறார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |