மன்னர் சார்லஸ் முடிசூட்டு விழாவிற்கு 2,000 கோடி ரூபாய் செலவு: கொந்தளிக்கும் மக்கள்
மன்னர் சார்லசுடைய முடிசூட்டு விழாவிற்கு, மக்கள் வரிப்பணத்தில் மிக்கப்பெரிய தொகை ஒன்று செலவிடப்பட்டுள்ளது தெரியவந்துள்ளதால் பிரித்தானிய மக்கள் கோபமடைந்துள்ளார்கள்.
2,000 கோடி ரூபாய் செலவு
மன்னர் சார்லசுடைய முடிசூட்டு விழாவிற்கு 72 மில்லியன் பவுண்டுகள் செலவிடப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கை மதிப்பில், அது 26,49,22,20,000.00 ரூபாய் ஆகும்.
சார்லசுடைய முடிசூட்டு விழா பிரம்மாண்டமான முறையில் நடைபெற்ற நிலையில், உலகம் முழுவதுமிருந்து பிரபலங்கள் கலந்துகொண்ட அந்த் விழாவை 20 மில்லியன் மக்கள் தொலைக்காட்சி வாயிலாக பார்வையிட்டுள்ளார்கள்.
ஆனால், அந்த நிகழ்ச்சிக்காக மக்களுடைய வரிப்பணத்தில் மிகப்பெரிய தொகை செலவிடப்பட்டுள்ளது தெரியவந்துள்ளதால் மக்கள் கோபமடைந்துள்ளார்கள்.
மன்னராட்சிக்கு எதிராக பிரச்சாரம் செய்து வரும் அமைப்பான Republic, இது மக்கள் வரிப்பணத்தை வீணாக்கும் மோசமான செயலாகும் என விமர்சித்துள்ளது.
பள்ளிப்பிள்ளைகளுக்கு மதிய உணவு கிடைக்காத ஒரு நிலை காணப்படும் நிலையில், மன்னருடைய முடிசூட்டு விழாவுக்கு 70 மில்லியன் பவுண்டுகள் செலவிடுவது மோசமான செயல் என்கிறார் Republic அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரியான கிரஹாம் ஸ்மித் என்பவர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |