பிரித்தானியாவில் 12 மில்லியன் மக்களுக்கு இன்று முதல் கிடைக்கவிருக்கும் உதவி: யார் தகுதியானவர்?
பிரித்தானியாவில் விலைவாசி உயர்வால் அவதிப்படும் மக்களில் 12 மில்லியன் பேர்களுக்கு தலா 600 பவுண்டுகள் இன்று முதல் விநியோகிக்கப்பட உள்ளது.
நவம்பர் 23ம் திகதி முதல்
முதியவர்களில் 11.6 மில்லியன் மக்கள் தங்களின் வங்கிக்கணக்குகளில் குறித்த தொகை செலுத்தப்பட உள்ளது. பிரித்தானிய அரசு அறிவித்துள்ள இந்த தொகையானது குளிர்காலத்தில் எரிசக்தி உதவித் தொகையாகவும் முதியவர்களுக்கு ஊக்கத்தொகையாகவும் பார்க்கப்படுகிறது.
எரிசக்தி உதவித்தொகையாக 100ல் இருந்து 300 பவுண்டுகள் ஓய்வூதிய வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் வழங்கப்படுகிறது. ஆனால் இந்த ஆண்டு, விலைவாசி உயர்வு காரணமாக 300 பவுண்டுகள் மேலதிகமாக வழங்க பிரித்தானிய அரசு முடிவு செய்துள்ளது.
@CNA
நவம்பர் 23ம் திகதி முதல் முதியவர்களுக்கு தங்கள் வங்கிக்கணக்கில் குறித்த தொகை வரவு வைக்கப்படும். இருப்பினும், அனைவருக்கும் ஒரே காலத்தில் விநியோகிக்கப்படாது என்றே தகவல் வெளியாகியுள்ளது.
நவம்பர் 23ம் திகதி தொடங்கி, டிசம்பர் மாதம் மற்றும் ஜனவரி 13ம் திகதிக்குள் அனைவருக்கும் குறித்த தொகையானது அளிக்கப்பட்டுவிடும் என்றே கூறுகின்றனர். அடுத்த ஆண்டு ஜனவரி 13ம் திகதிக்கும் பின்னரும் உதவித் தொகையை கைப்பற்றாதவர்கள் உரிய அலுவலகத்தை நாடவும் கோரிக்கை வைத்துள்ளனர்.
யார் தகுதியானவர்கள்
குளிர்கால எரிசக்தி உதவித்தொகையான 300 பவுண்டுகள் பெற, நீங்கள் 1956, செப்டம்பர் 25ம் திகதிக்கு முன்னர் பிறந்திருக்க வேண்டும். மேலும், 2022 செப்டம்பர் 19 முதல் 25ம் திகதி வரையில், ஒரு நாளேனும் நீங்கள் பிரித்தானியாவில் தங்கியிருந்திருக்க வேண்டும்.
இருப்பினும், பிரித்தானிய குடிமக்களாக இருந்தும் சுவிட்சர்லாந்தில் அல்லது ஐரோப்பிய பொருளாதாரப் பகுதி நாடுகளில் வசிப்பவராக இருந்தாலும், குறித்த உதவித் தொகைக்கு நீங்கள் தகுதியானவர்கள் என தெரிவித்துள்ளனர்.
ஆனால், சைப்ரஸ், பிரான்ஸ், ஜிப்ரால்டர், கிரீஸ், மால்டா, போர்த்துகல் அல்லது ஸ்பெயின் நாடுகளில் வசிக்கும் பிரித்தானியர்களுக்கு இந்த சலுகை இல்லை என்றே கூறப்படுகிறது.