ருவாண்டாவிற்கு புலம்பெயர் மக்களை அனுப்ப பிரித்தானிய அரசு செலவிடும் தொகை: வெளிவரும் புதிய தகவல்
ஆப்பிரிக்க நாடான ருவாண்டாவிற்கு ஒவ்வொரு புலம்பெயர் மக்களையும் அனுப்பி வைப்பதற்காக பிரித்தானிய அரசு செலவிடும் தொகை குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது.
169,000 பவுண்டுகள் தொகை
அதாவது ஒவ்வொரு புலம்பெயர் மக்களுக்கும் என பிரித்தானிய அரசானது 169,000 பவுண்டுகள் தொகையை செலவிடுவதாக கூறுகின்றனர். இந்த தொகையானது விமான கட்டணம், தங்கும் வசதி மற்றும் ருவாண்டா அரசாங்கத்திற்கு செலுத்தும் தொகை என மொத்தமாக இந்த கட்டணம் என கூறுகின்றனர்.
@getty
இந்த தொகையானது பிரித்தானிய உள்விவகார அமைச்சகத்தின் கணிப்பு என்றே கூறப்படுகிறது. மேலும் பாதுகாப்பான மூன்றாவது நாட்டுக்கு புலம்பெயர் மக்களை அனுப்புவதால், தலா 106,000 பவுண்டுகள் முதல் 165,000 பவுண்டுகள் வரையில் சேமிக்க முடியும் என்றே அரசாங்கம் தரப்பு வாதிடுகிறது.
நாள் ஒன்றிற்கு 32 மில்லியன்
மேலும், சிறு படகுகளில் எல்லையை கடக்கும் புலம்பெயர் மக்களில் ஐந்தில் இருவர் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் எனவும், அப்படி என்றால் மட்டுமே சேமிப்பு என்பது சாத்தியமாகும் எனவும் கூறுகின்றனர்.
@epa
இதனிடையே, பிரித்தானியா அரசாங்கம் புலம்பெயர் மக்கள் தொடர்பில் செலவிடும் தொகையானது 2026 இறுதியில் நாள் ஒன்றிற்கு 32 மில்லியன் பவுண்டுகள் என்ற தொகையை எட்டும் என கணிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |