ஆற்றில் நீராட சென்ற பிரபல கால்பந்து வீரர் முதலைக்கு விருந்தான கொடூரம்
கடுமையான வெப்பம் காரணமாக ஆற்றில் நீராட சென்ற கால்பந்து வீரரை முதலை ஒன்று விழுங்கிவிட்ட சம்பவம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முதலைக்கு இரை
தனது வாயில் கவ்விய உடல் பாகத்துடன் முதலை நீந்திச் செல்லும் காட்சிகள் வெளியாகி அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, உள்ளூர் மக்கள் அந்த முதலையை துப்பாக்கியால் சுட்டு, கால்பந்து வீரரின் உடலை மீட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Credit: Jam Press Vid
மத்திய அமெரிக்க நாடான கோஸ்ட்டா ரிக்காவை சேர்ந்தவர் 29 வயதான Jesus Alberto Lopez Ortiz என்ற கால்பந்து வீரர். தமது ரசிகர்களால் Chucho என அறியப்படும் இவர், துரதிர்ஷ்டவசமாக முதலைக்கு இரையாகியுள்ளார்.
அந்த முதலையை துரத்திச் சென்று உள்ளூர் மக்களே துப்பாக்கியால் சுட்டு, கால்பந்து வீரரின் சடலத்தை மீட்டதாக கூறப்படும் நிலையில், பொலிசார் வெளியிட்டுள்ள அறிக்கையில், தங்கள் அதிகாரிகளே துணிச்சலுடன் நடவடிக்கை முன்னெடுத்து, சடலத்தை மீட்டதாக குறிப்பிட்டுள்ளனர்.
Credit: Jam Press Vid
இந்த நிலையில், இறுதிச்சடங்குகளை முன்னெடுக்க, பொதுமக்கள் நிதியுதவி அளிக்க வேண்டும் என குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |