பிரித்தானியாவில் உயிரற்ற நிலையில் கண்டெடுக்கப்பட்ட தந்தையும் மகள்களும்: கூடவே இறந்து கிடந்த பெண் இவர்தான்...
பிரித்தானியாவில், வீடொன்றில் இரண்டு சிறுமிகளுடன் அவர்களுடைய தந்தையும் உயிரற்ற நிலையில் கண்டெடுக்கப்பட்ட நிலையில், கூடவே பெண் ஒருவரின் உடலும் கண்டுபிடிக்கப்பட்டது.
தற்போது, அந்தப் பெண்ணைக் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன.
உயிரற்ற நிலையில் கண்டெடுக்கப்பட்ட நான்கு உடல்கள்
இங்கிலாந்திலுள்ள Norfolk நகரில் அமைந்துள்ள வீடு ஒன்றில், Bartlomiej Kuczynski (45) என்னும் நபரும், அவரது மகள்களான Jasmin (12) மற்றும் Downreuang ஆகியோரும் உயிரற்ற நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்கள்.
Credit: Facebook
கூடவே, வேறொரு பெண்ணும் உயிரற்ற நிலையில் கண்டெடுக்கப்பட்டார். அந்தப் பெண் Bartlomiejஇன் மனைவி அல்ல. ஆகவே, அவர் யார் என்ற கேள்வி எழுந்தது.
இந்நிலையில், அந்தப் பெண்ணின் பெயர் Kanticha Noon (36) என தெரியவந்துள்ளது. அவர் Bartlomiejஇன் மைத்துனி, அதாவது, Bartlomiejஇன் மனைவியுடைய சகோதரி ஆவார்.
Credit: East Anglia News Service
சம்பவம் நடந்தபோது, Bartlomiejஇன் மனைவி வேலைக்குச் சென்றுள்ளார். Bartlomiej மற்றும் Kanticha ஆகியோர் கத்திக்குத்துக் காயங்களால் உயிரிழந்தது தெரியவந்துள்ள நிலையில், பிள்ளைகள் உயிரிழப்புக்கு என்ன காரணம் என்பதை அறிய, நாளை உடற்கூறு ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது.
Credit: PA
அந்த குடும்பத்தினருக்கு என்ன ஆனது, கத்தியால் குத்தியது யார் என்ற கேள்விகளுக்கே விடை தெரியாத நிலையில், தாய்லாந்து நாட்டவரான Kanticha, தனது சகோதரி குடும்பத்தினரை சந்திப்பதற்காக பிரித்தானியா வந்திருந்த நிலையில், அவர் எதற்காக கொல்லப்பட்டார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
Credit: East Anglia News Service
Credit: Enterprise
Credit: PA
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |