இருமல் மருந்து சாப்பிட்ட 14 குழந்தைகள் பலி: மருந்துக்கு தடை விதித்த அதிகாரிகள்
இந்தியாவின் சில மாநிலங்களில் இருமல் மருந்தொன்றை உட்கொண்ட 15 வயதுக்கு உட்பட்ட 14 குழந்தைகள் பலியான விடயம் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.
இருமல் மருந்து சாப்பிட்ட 14 குழந்தைகள் பலி
குறிப்பாக, மஹாராஷ்ட்ரா மாநிலத்திலுள்ள நாக்பூர் மற்றும் மத்தியப்பிரதேசத்திலுள்ள Chhindwara என்னும் இரு நகரங்களில்தான் அதிக எண்ணிக்கையில் பிள்ளைகள் பலியாகியுள்ளார்கள்.
Chhindwaraவில், 3 முதல் 10 வயதுடைய ஆறு பிள்ளைகள் உயிரிழந்துள்ளார்கள். பிள்ளைகளுக்கு ஜலதோஷம், இருமல் லேசான காய்ச்சல் இருந்த நிலையில், இருமல் மருந்தை உட்கொண்ட 24 மணி நேரத்தில் அவர்கள் சுயநினைவிழந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
பிள்ளைகளில் பலருக்கு சிறுநீரகம் செயலிழந்துள்ளது. வென்டிலேட்டர் பொருத்தப்பட்டு, டயாலிசிஸ் செய்யப்பட்ட நிலையிலும், சிகிச்சை பலனின்றி பிள்ளைகள் உயிரிழந்துள்ளார்கள்.
பிள்ளைகளின் உடலிலிருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ள நிலையில், அவர்களுடைய மரணம் குறித்து மருத்துவர்களிடையே மாறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றன.
சிலர் ஒரு குறிப்பிட்ட வைரஸ் மரணத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என்று கூற, சிலர், நச்சுத்தன்மை காரணமாக பிள்ளைகள் உயிரிழந்திருக்கலாம் என கூறியுள்ளார்கள்.
மருந்துகளின் மாதிரிகளும் ஆய்வுக்குட்படுத்தப்பட்டுவரும் நிலையில், அந்த மருந்தை விற்பனை செய்ய அதிகாரிகள் தடை விதித்துள்ளார்கள்.
மயங்கி விழுந்த மருத்துவர்
இந்நிலையில், அந்த குறிப்பிட்ட இருமல் மருந்து பாதுகாப்பானதுதான் என நிரூபிப்பதற்காக அந்த இருமல் மருந்தை உட்கொண்டார், Dr Tarachand Yogi என்னும் மூத்த மருத்துவர் ஒருவர்.
ஆனால், மருந்தை உட்கொண்டதும் மயங்கி விழுந்த அவருக்கு, எட்டு மணி நேரம் கழித்துதான் மீண்டும் சுயநினைவு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |