நாடுகடத்தப்படலாம்... ஹமாஸ் தொடர்பில் வெளிநாட்டவர்களுக்கு பிரித்தானியா எச்சரிக்கை
பிரித்தானியாவில் வாழும் வெளிநாட்டவர்கள், யூத விரோத செயல்களில் ஈடுபட்டாலோ அல்லது ஹமாஸைப் புகழ்ந்தாலோ நாடுகடத்தப்படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளார்கள்.
புலம்பெயர்தல் துறை அமைச்சர் கோரிக்கை
பிரித்தானிய புலம்பெயர்தல் அமைச்சரான ராபர்ட் ஜென்ரிக் (Robert Jenrick), தேசிய பாதுகாப்பு கருதி, வெறுப்புக் குற்றங்களில் ஈடுபடுவோரின் விசாக்களை ரத்து செய்வதற்கான வழிகளை ஆராயுமாறு உள்துறை அலுவலக அதிகாரிகளை கேட்டுக் கொண்டுள்ளார்.
GETTY IMAGES
தேசிய பாதுகாப்பை மேற்கோள் காட்டி, மாணவர்கள், சுற்றுலாப்பயணிகள் மற்றும் தொழிலாளர்களுக்கான விசாக்களை ரத்து செய்ய பிரித்தானிய சட்டம் அனுமதிக்கிறது, ஆக, தற்போது அமைச்சர் ராபர்ட் அரசுக்கு முன்வைத்துள்ள கோரிக்கை, தடைசெய்யப்பட்ட அமைப்பான ஹமாஸுக்கு ஆதரவு தெரிவிப்பது தொடர்பானது என நம்பப்படுகிறது.
பிரான்சிலும் நடவடிக்கை
பிரான்ஸ் உள்துறை அமைச்சர் ஜெரால்ட் டார்மானின் (Gerald Darmanin), பிரான்சில் யூத விரோத செயல்களில் ஈடுபடும் அனைத்து வெளிநாட்டினரையும் நாடுகடத்த உத்தரவிட்டுள்ளார்.
இந்த உத்தரவு காரணமாக ஏற்கனவே 3 பேர் பிரான்சில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
AFP via Getty
இதற்கிடையில், பிரித்தானியாவிலுள்ள பிரைட்டனில், கடந்த வார இறுதியில் ஹமாஸுக்கு ஆதரவான உரையை நிகழ்த்தியதாகக் கூறப்படும் 22 வயது பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |