உண்மையாகவே கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் பக்க விளைவுகளால் பாதிக்கப்படுகிறார்களா?: ஒரு ஆய்வு
சமீப காலமாக கொரோனா தடுப்பூசி போட்டுகொண்டவர்கள் பலருக்கு பக்க விளைவுகள் ஏற்படுவது குறித்த செய்திகள் பரவலாக வெளிவந்த வண்ணம் உள்ளன. ஆனால், உண்மையாகவே கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் பக்க விளைவுகளால் பாதிக்கப்படுகிறார்களா என்ற ஒரு கேள்வியும் எழுந்துள்ளது.
இதன் பின்னணியில் உள்ள உண்மையைக் கண்டறிவதற்காக பைசர் நிறுவனம் ஒரு ஆய்வை மேற்கொண்டது. அதன்படி, சுவிட்சர்லாந்தில் சிலருக்கு தடுப்பூசி போடப்பட்டு அவர்களுக்கு பக்க விளைவுகள் ஏற்படுகின்றனவா என கண்காணிக்கப்பட்டனர்.
எதிர்பார்த்ததுபோலவே, சிலருக்கு பக்க விளைவுகள் ஏற்பட்டன. ஆனால், உண்மை என்னவென்றால், அவர்களுக்கு ஊசி மூலம் செலுத்தப்பட்டது கொரோனா தடுப்பு மருந்தே அல்ல... வெறும் உப்புத்தண்ணீர். ஆக, அவர்களுக்கு ஏற்பட்டது உண்மையான பக்க விளைவுகள் அல்ல, அதை nocebo ( Negative placebo effect)என்கிறார்கள்.
அதன் பொருள் என்னவென்றால், சிலருக்கு ஊசி என்றால் பயம் இருக்கும். ஊசி போட்டால் நமக்கு ஏதவாது நடந்துவிடும் என்று அவர்கள் பயப்படுவார்கள், நம்புவார்கள்.
அப்படி பயப்படுபவர்களுக்கு இதுபோல் தலைவலியோ களைப்போ ஏற்படும்.
ஆக, அது தடுப்பூசியால் ஏற்பட்ட பக்க விளைவு அல்ல, அவர்கள் பயத்தால் ஏற்பட்ட
ஒரு போலியான பக்க விளைவு என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
சுவிஸ் மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பான Swissmedicம், இது போன்ற ஒரு விடயம்
இருப்பதை தானும் கவனித்துள்ளதாக தெரிவித்துள்ளது.