பாடசாலை கட்டணத்திற்கே வழியில்லாமல் தவித்த நபர்... இன்று சொத்து மதிப்பு ரூ 10,000 கோடி
அல்புகாரி அறக்கட்டளையின் நிறுவனரான சையத் மொக்தார் அல்-புகாரியின் வெற்றிக் கதை பலரையும் ஈர்த்துள்ளது.
படிப்பை கைவிடும் நிலை
மலேசியாவின் Kedah பகுதியில் ஏழை குடும்பத்தில் பிறந்த அல்புகாரி, சவால்களை எதிர்கொண்டு தற்போது நம்ப முடியாத உயரத்தில் இருப்பதுடன், தொண்டு நிறுவனங்களால் பலரது வாழ்க்கைத் தரத்தையும் மாற்றியுள்ளார்.
திடீரென்று பரவிய நோயால் குடும்பத்தின் கால்நடை வியாபாரம் பேரிழப்பில் முடிய, தேர்வுக்கு கட்டணம் செலுத்த முடியாமல் பாடசாலை படிப்பை கைவிடும் நிலைக்கு அல்புகாரி தள்ளப்பட்டார்.
ஆனால் நம்பிக்கை தளராத அல்புகாரி அரிசி வியாபாரியாக தமது வாழ்க்கையை தொடங்கினார். அதன் பின்னர் கட்டுமான நிறுவனம், கார் விற்பனை, பொறியியல் உட்பட பல்வேறு தொழிற்முயற்சிகளை முன்னெடுத்து விரிவுபடுத்தினார்.
உலக நாடுகளின் விருதுகள்
இதனால் சர்வதேச அளவில் அறியப்படும் நபராக உயர்ந்தார். தற்போது மலேசியாவில் 11வது பெரும் கோடீஸ்வரராக அறியப்படும் அல்புகாரியின் மொத்த சொத்து மதிப்பு என்பது இந்திய மதிப்பில் ரூ 10,000 கோடி என்றே கூறப்படுகிறது.
தொழில் முயற்சிகளில் பெரும் வெற்றிகளை குவித்து வருவது போல, உதவிகள் செய்வதிலும் முன்வரிசையில் உள்ளார். இதுவரை அல்புகாரி 500 மில்லியன் டொலருக்கும் அதிகமான தொகையை பல்வேறு தேவைகளுக்காக,
அனாதைகள், அகதிகள் மற்றும் இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் பொருட்டு நன்கொடை அளித்துள்ளார். இதனால் தமது சமூக மக்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், உலக நாடுகளின் விருதுகள் மற்றும் நன்மதிப்பையும் பெற்றுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |