பிரித்தானியாவில் திணறும் குடும்பங்கள்: அதிகரித்துள்ள வரி
பிரித்தானியாவில் உள்ளாட்சி வரி நிலுவைத் தொகை 9.3 பில்லியன் பவுண்டுகளாக உயர்ந்துள்ளது.
உள்ளாட்சி வரி
இங்கிலாந்தில் உள்ள லட்சக்கணக்கான குடும்பங்கள், ஏப்ரல் 1 முதல் சராசரியாக 4.9 சதவீத உள்ளாட்சி வரி உயர்வை எதிர்கொண்டன.
இந்த உயர்வு பணவீக்க விகிதத்தை விட அதிகமாக இருந்ததோடு, வாழ்க்கைச் செலவு நெருக்கடியையும் அதிகரித்துள்ளது.
அதேபோல் ஸ்கொட்லாந்து மற்றும் வேல்ஸ் அரசாங்கங்களின் சமீபத்திய புள்ளிவிவரங்கள், அங்குள்ள உள்ளாட்சி வரி நிலுவைத் தொகையை முறையே 1.6 பில்லியன் மற்றும் 320 மில்லியன் பவுண்டுகள் என்று குறிப்பிடுகின்றன.
வீட்டுவசதி, சமூகங்கள் மற்றும் உள்ளாட்சி நிர்வாக அமைச்சகம் இன்று வெளியிட்ட தரவுகளின்படி, இங்கிலாந்தில் உள்ளாட்சி வரி நிலுவைத் தொகை 7.4 பில்லியன் பவுண்டுகளை எட்டியுள்ளது.
வரி நிலுவைத் தொகை
கடந்த ஆண்டில் மட்டும் உள்ளாட்சி வரி நிலுவைத் தொகை 1 பில்லியன் பவுண்டுகள் அல்லது 12 சதவீதம் அதிகரித்துள்ளது.
கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்த நிலுவைத் தொகை 65 சதவீதம் அளவிற்கு உயந்துள்ளது. பிரித்தானியா முழுவதும் உள்ளாட்சி வரி நிலுவைத் தொகையின் மொத்த அளவு 9.3 பில்லியன் பவுண்டுகளை எட்டியுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
இவ்வாறாக அதிகரித்து வரும் செலவுகளை சமாளிக்க முடியாமல் குடும்பங்கள் திணறுவதாக தகவல்கள் கூறுகின்றன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |