ஜேர்மனி நகராட்சி மன்றத்தில் ஸ்விங்கர் பார்ட்டி: சர்ச்சையான கவுன்சிலரின் வினோத திட்டம்
Councilman in Germany propose Swinging Parties: ஜேர்மன் நகராட்சி மன்ற கவுன்சிலரின் ஸ்விங்கர் பார்ட்டி திட்டம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கவுன்சிலரின் சர்ச்சையான ஸ்விங்கர் பார்ட்டி திட்டம்
ஜேர்மனியின் மான்ஹெய்ம்(Mannheim) நகரின் ஊராட்சி மன்றத்தில் வயது வந்தவர்களுக்கான ஸ்விங்கர்(Swinging) பார்ட்டி நிகழ்ச்சிகளை நடத்த அப்பகுதி உள்ளூர் அரசியல்வாதியும் கவுன்சிலருமான ஜூலியன் ஃபெராட்(Julien Ferrat) முன்வைத்த யோசனை மிகவும் சர்ச்சையாக வெடித்துள்ளது.
நகராட்சிக்கான வருவாயை ஈட்டுவது மற்றும் மாற்று வாழ்க்கை முறைகள் மீதான களங்கத்தை நீக்குவது போன்ற நோக்கங்களுக்காக இந்த திட்டமானது முன் வைக்கப்பட்டு இருப்பதாக அவர் விளக்கியுள்ளார்.

liberal Die Mannheimer கட்சியின் தலைவரான ஜூலியன் ஃபெராட்(Julien Ferrat) ஜேர்மனியின் மிகவும் பைத்தியக்கார கவுன்சிலர்(Germany’s craziest councillor") என்று அழைக்கப்படுவர்.
ஏற்கனவே இது தொடர்பாக 50 பேர் ஆர்வம் தெரிவித்து இருப்பதாக கூறப்படும் நிலையில், அவர்களை நேரில் சந்திக்க ஃபெராட் திட்டமிட்டுள்ளார்.
ஸ்விங்கர் பார்ட்டி என்பது?
ஸ்விங்கர் பார்ட்டி என்பது கூட்டாளிகளின் முழு ஒப்புதல் மற்றும் அறிதலுடன் தங்கள் பாலியல் துணைவர்களை பரஸ்பரம் பரிமாறிக் கொள்வது ஆகும்.
ஜேர்மனியில் கிட்டத்தட்ட 1,28,000 ஸ்விங்கர்கள் மற்றும் பல ஸ்விங்கர் பார்ட்டி கிளப்புகள் உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் அரசாங்க நிர்வாகக் கட்டிடத்தை வயது வந்தவர்களுக்கான பொழுதுபோக்கு இடமாக மாற்றும் ஃபெராட் திட்டத்திற்கும் கடும் எதிர்ப்புகள் கிளம்பி வருகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |