நீட் தேர்வை சரியாக எழுத முடியவில்லை, மன்னித்து விடுங்கள்.., கடிதம் எழுதிவிட்டு வீட்டை விட்டு சென்ற மாணவன்
நீட் தேர்வை சரியாக எழுத முடியாததால் கடிதம் எழுதிவிட்டு மாணவன் மாயமாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிறுவன் மாயம்
தமிழக மாவட்டமான திருப்பூர், பல்லடம் அருகே உள்ள சித்தம்பலம்புதூர் கிராமத்தை சேர்ந்த தம்பதியினர் தனபால் மற்றும் சாவித்திரி. இவர்களுடைய மகன் சங்கீர்த்தன் அரசு பள்ளியில் பள்ளி படிப்பை முடித்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 2024-ம் ஆண்டில் மருத்துவர் ஆக வேண்டும் என்று நீட் தேர்வை எழுதியுள்ளார். ஆனால், அதில் 230 மதிப்பெண்கள் மட்டுமே கிடைத்ததால் தேர்ச்சி பெற முடியவில்லை.
இதனால், ஒன்லைனில் பயிற்சி பெற்ற மாணவன் நேற்று நீட் தேர்வை எழுதிவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது, வினாத்தாள்களை வைத்து இரவு முழுவதும் எவ்வளவு மதிப்பெண்கள் வரும் சோதித்து பார்த்துள்ளார்.
தான் இந்த முறையும் தேர்ச்சி பெற முடியாது என்று நினைத்து கடிதம் எழுதி வைத்து விட்டு வீட்டை விட்டு சென்றுள்ளார். அந்த கடிதத்தில், "நீட் தேர்வை சரியாக எழுதாததால் கொடுத்த வாக்கை என்னால் காப்பாற்ற முடியவில்லை.
என்னை மன்னித்து விடுங்கள். நீட் சீட்டை பெற்றுக்கொண்டு தான் வீடு திரும்புவேன்" என்று எழுதியுள்ளார்.
இதையடுத்து, காலையில் சங்கீர்த்தன் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் தனது மகனை கண்டுபிடித்து தருமாறு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இது தொடர்பாக தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |