பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கான கவுண்டவுன் ஆரம்பம்
பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் 2024 ஆண்டிற்கான ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பமாகவுள்ள நிலையில், இன்று தீபம் ஏற்றி வைக்கப்பட்டதோடு 30 நாட்கள் கவுண்ட் டவுன் (Countdown) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
ஒலிம்பிக் 2024
ஒலிம்பிக்கின் 33 ஆவது தொடரானது பிரான்ஸ் தலைநகரான பாரிஸியில் எதிர்ரும் ஜூலை மாதம் 26ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
ஜூலை 26ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு ஆகஸ்ட் 11 ஆம் திகதி நிறைவு விழா வரை, 206 நாடுகளில் இருந்து 10,500 விளையாட்டு வீரர்கள் 32 பிரிவுகளில் போட்டியிடுவார்கள்.
இந்த நிகழ்வின் போது பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என பிரான்ஸ் அரசாங்கம் தெரிவித்திருந்தது.
ஒவ்வொரு நாளும் சுமார் 45,000 பொலிஸ், 18,000 வீரர்கள் மற்றும் 20,000 தனியார் பாதுகாப்புக் காவலர்களும் ஈடுபடுத்தப்படுவார்கள்.
மேலும், ஜெர்மனி உட்பட 2,000க்கும் மேற்பட்ட வெளிநாட்டு போலீஸ் அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
இந்நிலையில் இன்று தீபம் ஏற்றி வைக்கப்பட்டதோடு 30 நாட்கள் கவுண்ட் டவுன் (Countdown) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
ஒலிம்பிக் போட்டிக்கான Countdown அரம்பம்
FIFA உலகளாவிய கால்பந்து மேம்பாட்டுத் தலைவர் அர்சென் வெங்கரினால் ஒலிம்பிக் தீபம் ஏற்றி கவுண்ட் டவுன் (Countdown) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
FIFA’s Chief of Global Football Development Arsène Wenger was back at home in Strasbourg today to carry the Olympic Flame and light up the cauldron ahead of the Paris 2024 Olympics.
— Gooner Chris (@ArsenalN7) June 26, 2024
Arsène Wenger, he’s done it again ❤️pic.twitter.com/SOcWZ2yd1w
ஒலிம்பிக் போட்டியானது எந்நாட்டில் நடைபெற்றாலும், கிரேக்கத்தின் தென் பகுதி நகரான ஒலிம்பியாவில் பாரம்பரிய முறையில், நடனம், நாடகம் போன்ற கலைவிழாக்கள் நடத்தி இச்சுடர் ஏற்றப்படும்.
குறித்த கலைநிகழ்வின் போது நீளமான உடையணிந்த வீராங்கனை ஒளிக்கான கிரேக்கக் கடவுள் அபோலோவிடம் பிராத்தனை செய்து, நிலத்தில் மண்டியிட்டு சூரிய ஒளியால் ஒலிம்பிக் சுடரை ஏற்றுவார்.
இந்த சுடரானது உலக நாடுகளை சுற்றி இறுதியில் போட்டி நடைபெறும் நாட்டை வந்தடையும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |