வாஸ்து: வீட்டில் சமைக்கும் சப்பாத்தியை எண்ணினால் பொருளாதார கஷ்டம் வருமாம்!
வாஸ்து சாஸ்திரத்தின்படி, சப்பாத்தி சுடும்போது, அவற்றை எண்ணக் கூடாது என்றும், அதனால், வீட்டில் பிரச்சனைகள் உருவாகும்.
மேலும், பொருளாதார நிலை பலவீனமடையும் என்று ஜோதிடரும், வாஸ்து ஆலோசகருமான பண்டிட் ஹிதேந்திர குமார் சர்மா தெரிவித்துள்ளார்.
வீட்டில் சப்பாத்தியை உண்டபிறகு எஞ்சிய ரொட்டிகளை தூக்கிவீசுவதற்கு பதிலாக மாட்டுக்கு கொடுக்க வேண்டும்.
பசுக்களுக்கு சப்பாத்தியை கொடுப்பதால், நல்ல கர்ம பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை. மேலும், கிரகத்தை பலப்படுத்துகிறது.
வீட்டில் இருந்த பிரச்சனைகளும் நீங்கும். மேலும், ஜோதிட சாஸ்திரத்தின்படி, நாய்க்கு சப்பாத்தி கொடுப்பது நல்ல செயல்களை அதிகரிக்கும்.
அத்துடன், ஒருவர் மரணமடைந்த வீட்டில் சப்பாத்தி அல்லது ரொட்டி செய்யக் கூடாது.
ஒருவர் இறக்கும்போது, வீட்டில் ரொட்டி தயாரித்தால், அது குடும்பத்தில் இருப்பவர்களின் உடல் நலத்திற்கு நல்லதல்ல.
மேலும், இறந்தவரின் ஆன்மா சாந்தி அடையாது என்பது ஐதீகம் என்று பண்டிட் ஹிதேந்திர குமார் சர்மா தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |