பிரித்தானியாவின் பயண தடை பட்டியலில் சேர்க்கப்படவுள்ள பிரபல நாடுகள்! கசிந்த முக்கிய தகவல்
பிரித்தானியாவின் 33 நாடுகள் அடங்கிய அதிக ஆபத்துள்ள சிவப்பு பட்டியலில் ஸ்பெயின், அமெரிக்கா ஆகிய இரு நாடுகள் சேர்க்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பிரித்தானியாவின் பயண தடை பட்டியலில் தற்போது போர்ச்சுகல், தென் அமெரிக்கா மற்றும் தென் ஆப்பிரிக்க உள்ளிட்ட 33 நாடுகள் உள்ளன.
ஸ்பெயின், அமெரிக்கா ஆகிய இரு நாடுகள் அப்பட்டியிலில் சேர்க்கப்பட்டால், இரு நாடுகளிலிருந்து நாடு திரும்பும் பிரிட்டிஷ் நாட்டினரைத் தவிர்த்து, அனைத்து பயணிகளுக்கும் தடை விதிக்கப்படும்.
கூடுதலாக, இந்த இரு நாடுகளிலிருந்தும் பிரித்தானியாவிற்குள் நுழையும் அனைவரும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தனிமைப்படுத்தப்பட்ட ஹோட்டலில் பத்து நாட்களுக்கு சுயமாக தனிமைப்படுத்தப்பட வேண்டும், இதற்கு ஒரு நபருக்கு 1,750 பவுண்ட் வரை செலவாகும்.
சமீபத்திய நாட்களில் ஸ்பெயினிலும் அமெரிக்காவிலும் புதிய வகை கொரோனாவால் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து விவாதிக்க பிரித்தானியா போக்குவரத்துத் துறை, சுகாதார அதிகாரிகளை நேற்று சந்தித்தனர்.
இரு நாடுகளை சிவப்பு பட்டியலில் சேர்க்கலாமா என்பது குறித்து இந்த வாரம் அமைச்சரவை கொரோனா செயல்பாட்டுக் குழுவில் முடிவு எடுக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.