தங்கத்தை பெருமளவில் குவித்து வைத்திருக்கும் 10 நாடுகள்... முந்தும் ஐரோப்பா
ஒரு நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதில் தங்க கையிருப்பு முக்கிய பங்கு வகிக்கும் நிலையில், தங்கத்தை பெருமளவில் குவித்து வைத்திருக்கும் 10 நாடுகளின் பட்டியல் வெளியாகியுள்ளது.
பொருளாதார நிச்சயமற்ற தன்மை
தங்கத்தை கையிருப்பு வைத்திருக்கும் திட்டத்தை உலக நாடுகள் 1970களிலேயே உத்தியோகப்பூர்வமாக கைவிட்டபோதும், தற்போதும் பல நாடுகள் பெருமளவில் குவித்து வைத்துள்ளன.
மட்டுமின்றி, வளர்ந்து வரும் பொருளாதார நிச்சயமற்ற தன்மை காரணமாக இந்த இருப்புகளுக்கான தேவையும் அதிகரித்து வருகிறது. மேலும், பல நாடுகளின் மத்திய வங்கிகள் மீண்டும் தங்கத்தை முதன்மையான பாதுகாப்பான சொத்தாகக் கருதத் தொடங்கியுள்ளன.
நவீன பொருளாதார சூழல்கள் மாறினாலும், தங்கத்தின் கையிருப்பு ஒரு நாட்டின் கடன் தகுதி மற்றும் ஒட்டுமொத்த பொருளாதார நிலையை செல்வாக்கு செலுத்தும் கருவியாக உள்ளது.
முதன்மையான பல நாடுகள் தங்கம் இருப்பு வைத்திருப்பதற்கு பல காரணங்கள் உள்ளன. முதலாவதாக, தங்கம் ஒரு நிலையான மற்றும் நம்பகமான மதிப்பின் அங்கமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
தங்கத்தை குவித்து வைத்திருக்கும் நாடுகள்
மட்டுமின்றி, தங்கத்தை வைத்திருப்பதன் மூலம், நாடுகள் தங்கள் பொருளாதார ஸ்திரத்தன்மையில் நம்பிக்கையை வளர்க்க முடியும், குறிப்பாக நிதி நிச்சயமற்ற காலங்களில். சர்வதேச வர்த்தகம் மற்றும் நிதித்துறையிலும் தங்க இருப்புக்கள் பங்கு வகிக்கின்றன.
சில நாடுகள் வர்த்தக ஏற்றத்தாழ்வுகளைத் தீர்க்க அல்லது கடனுக்கான பிணையமாக தங்கத்தைப் பயன்படுத்துகின்றன. உலகில் தங்கத்தை பெருமளவு குவித்து வைத்திருக்கும் நாடுகளில் முதலிடத்தில் அமெரிக்கா உள்ளது.
சுமார் 8133 டன் அளவுக்கு தங்கம் கையிருப்பு வைத்துள்ளது அமெரிக்கா. இரண்டாமிடத்தில் 3,352 டன்களுடன் ஜேர்மனி உள்ளது. இத்தாலி( 2451 டன்), பிரான்ஸ்(2,436 டன்), ரஷ்யா(2,332 டன்), சீனா(2,191 டன்), சுவிட்சர்லாந்து(1,040 டன்), ஜப்பான்(845 டன்), இந்தியா(800 டன்), நெதர்லாந்து(612 டன்).
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |