மொத்த மக்களில் பாதிக்கும் மேல் இலக்காகலாம்: கொரோனா பரவல் தொடர்பில் சுவிஸ் நிபுணர் எச்சரிக்கை
Omicron மாறுபாடு அதன் தற்போதைய வேகத்தில் தொடர்ந்து பரவினால் சுவிட்சர்லாந்தின் மக்கள் தொகையில் பாதிக்கும் மேலானவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படலாம் என நிபுணர்கள் தரப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
சுவிட்சர்லாந்தின் கொரோனா அறிவியல் பணிக்குழு நிபுணர் Richard Neher குறித்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். சுவிட்சர்லாந்தின் தற்போதை சூழலை கருத்தில்கொண்டால், ஜனவரி மாதத்தில் தினசரி 30,000 மக்கள் கொரோனாவால் பாதிப்புக்கு உள்ளாகலாம் என்றார்.
மேலும், நாளுக்கு 20,000 பேர் பாதிக்கப்பட்டு, அத்துடன் அதே அளவு எண்ணிக்கையில் பதிவு செய்யப்படாத கொரோனா தொற்றாளர்களும் உருவானால், மொத்த மக்கள் தொகையில் 3% பேர்கள் ஒவ்வொரு வாரமும் கொரோனாவுக்கு இலக்காவதற்கு நிகரானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஓமிக்ரன் பரவல் இதே வேகத்தில் பரவும் என்றால் இன்னும் ஒரு வாரத்தில் நாட்டின் மக்கள் தொகையில் பாதி பேர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுவதை நம்மால் கட்டுப்படுத்த முடியாமல் போகும் என்றார்.
ஓமிக்ரான் ஆபாயம் லேசானது என்றே பிரித்தானியாவும் தென்னாபிரிக்காவும் குறிப்பிட்டுள்ளனர். மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்துவதே, ஓமிக்ரான் பரவலை தடுக்க முதன்மையான வழி என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த வியாழக்கிழமை சுவிட்சர்லாந்தில் 19,000 பேர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தை பொறுத்தமட்டில் டிசம்பர் 17ம் திகதிக்கு பின்னர் புதிய கட்டுப்பாடுகள் எதையும் விதிக்கவில்லை.