ஒரு ரூபாய் கொடுத்தால் 500 ரூபாயாக அள்ளிக்கொடுக்கும் நாடு: எது தெரியுமா?
உலக பொருளாதார சந்தையில் ஒவ்வொரு நாட்டின் பணத்திற்கும் தனித்தனி மதிப்பு இருக்கும்.
அதில் குறிப்பாக அமெரிக்காவின் ஒரு டொலர் இந்திய மதிப்பில் ரூ.83. அதேபோல் இந்தியா மதிப்பில் ரூ.221 கொடுத்தால்தான், பக்ரைன் ஒரு தினாரை கொடுக்கும்.
மேலும், இந்திய மதிப்பில் 271 ரூபாய் கொடுத்தால் குவைத் நாட்டின் ஒரு தினாரை பெறலாம்.
இதற்கு நேர்மறையாக இந்திய மதிப்பில் ரூ.1 கொடுத்தால் ரூ. 500 அள்ளிக்கொடுக்க ஒரு நாடு உள்ளது.
சில ஆண்டுகளாக இந்த நாட்டின் மீது அமெரிக்கா பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ளது.
இதன் காரணமாக, அமெரிக்காவுக்கு பயந்து பல நாடுகள் ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெயை வாங்கவில்லை. இதனால் சர்வதேச சந்தையில், ஈரானின் பொருளாதாரம் சரியத் தொடங்கியது.
அதனால்தான் இந்த நாட்டில் இந்திய மதிப்பில் 1 ரூபாயின் மதிப்பு குறைந்தபட்சம் 500 ரூபாய்க்கு சமம்.
அந்த நாடு ஈரான் தான். பொருளாதாரத்தில் வலுவாக இருந்தாலும், அதன் நாணய மதிப்பு மிகவும் பாதாளத்தில் இருக்கிறது.
ஈரான் பணத்தை அந்நாட்டினர் ரியால்-இ-ஈரான் என்று அழைக்கின்றனர். ஆங்கிலத்தில் ஈரான் ரியால் என்று அழைக்கப்படுகிறது.
ஈரானின் பொருளாதார நிலை மிகவும் மோசமாக இருந்தாலும், இந்தியாவுடனான உறவு தொடர்கிறது. இருப்பினும், ஒரு இந்திய ரூபாய் 507.22 ஈரானிய ரியாலுக்கு சமம்.
இந்தியா உள்ளிட்ட சில நாடுகளுடன் மட்டுமே, ஈரான் நாடு, அவர்களின் உள்ளூர் நாணயத்தில் வர்த்தகம் செய்து வருகிறது.
அமெரிக்காவும் தொடரும் பகையால், அமெரிக்கா டாலர்களை ஏற்றுக் கொள்வதில்லை. இதனால், அமெரிக்க டாலரை வைத்திருப்பது, இந்த நாட்டில் மிகப்பெரிய குற்றம்.
ஈரானைப் போலவே சியரா லியோனின் நாட்டிலும், ஒரு இந்திய ரூபாய்க்கு 238.32 ரூபாய் கொடுக்கப்படுகிறது.
இதேபோல், இந்தோனேசியாவிலும் 1 இந்திய ரூபாய், ரூ.190க்கு சமம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |