உலகில் மிக நீளமான பெயரைக் கொண்ட நாடு.., எது தெரியுமா?
உலகில் நீளமான பெயரைக் கொண்ட நாடு எது என்பது பலருக்கும் தெரியாத ஒரு விடயம்.
அந்தவகையில் உலகில் மிக நீளமான பெயரை கொண்ட நாடாக பிரிட்டன் இருந்து வருகிறது.
இதனுடைய அதிகாரப்பூர்வ பெயர் The United Kingdom Of Great Britain And Northern Ireland என்பதாகும். இதில் 45 எழுத்துக்கள் உள்ளன.
இரண்டாவது இடத்தில் கிரிபாட்டி நாடு உள்ளது. இந்த நாடு மத்திய பசுபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்த ஒரு தீவு ஆகும்.
இதன் உண்மையான பெயர் Independent and Sovereign Republic of Kiribati என்பதாகும். இதில் 41 எழுத்துக்கள் உள்ளன.
அதேபோல், ஸ்ரீலங்கா என்று அழைக்கும் இலங்கைக்கும் அதிகாரப்பூர்வமாக நீண்ட பெயர் உள்ளது.
இலங்கையின் அதிகாரப்பூர்வ பெயர் Democratic Socialist Republic of Sri Lanka என்பதாகும். இதில் 37 எழுத்துக்கள் உள்ளன.
இதேபோன்று நேபாள நாட்டின் அதிகாரப்பூர்வ பெயர் 32 எழுத்துக்களை கொண்டதாகும்.
அதாவது, Federal Democratic Republic of Nepal என்பது நேபாளத்தின் அதிகாரப்பூர்வ பெயராக உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |