உடல் முழுவதும் காயங்களுடன் தெருவில் கண்டுபிடிக்கப்பட்ட சிறுவன்... வீட்டுக்கு பொலிசாரை வழிநடத்தியபோது தெரியவந்த திடுக் உண்மை
ஸ்காட்லாந்தில் நான்கு வயது சிறுவன் ஒருவன் உடல் முழுக்க காயங்களுடன் இரவு உடையில் தனியாக நடமாடுவதைக் கண்ட ஒருவர் பொலிசாருக்கு தகவலளித்துள்ளார்.
East Ayrshire என்ற இடத்தில் அந்த சிறுவனை மீட்ட பொலிசார், அவனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அவனது சட்டையைக் கழற்றிய மருத்துவர்கள், அவனது உடல் முழுவதும் இருந்த காயங்களைக் கண்டு அவனுக்கு இரத்தப் புற்றுநோய் இருக்குமோ என முதலில் சந்தேகப்பட்டிருக்கிறார்கள்.
மருத்துவமனையில் அவனுக்கு சாப்பிட சாண்ட்விச் கொடுக்கப்பட, ஒரே நேரத்தில் இரண்டு சாண்ட்விச்களை எடுத்து வேகவேகமாக சாப்பிட்ட அந்த சிறுவன், மேலும் தட்டிலிருந்த இறைச்சி, உருளைக்கிழங்கு ஆகியவற்றை சாப்பிட்டுவிட்டு, மேலும் மூன்று சாண்ட்விச்களையும் ஒரு ஆப்பிளையும் கேட்டு வாங்கி சாப்பிட்டிருக்கிறான்.
குழந்தை எத்தனை நாட்களாக சாப்பிடவில்லையோ தெரியவில்லை, அவ்வளவு பசியில் இருந்திருக்கிறான் அவன்.
பின்னர் அவனிடன் விசாரித்த பொலிசார், அவன் கொடுத்த தகவலில்பேரில் அவனது வீட்டுக்கு சென்றுள்ளார்கள்.
அங்கே சென்று பார்த்தால், ஒரு இரண்டு வயது குழந்தையை மரத்தாலான கூண்டு ஒன்றில் அடைத்துவைத்திருக்கிறார்கள்.
அவனது நேப்பியைக் கூட மாற்றவில்லை. இந்த நான்கு வயது சிறுவன், வீட்டின் ஜன்னலிலிருந்த ஒரு துவாரம் வழியாக நான்கு அடி உயரத்திலிருந்து விழுந்திருக்கிறான்.
ஆனால் இது எதையுமே அவனது பெற்றோரான Claire Boyle(34)ம், Timothy Johnston (57)ம் கவனிக்கவேயில்லை.
அத்துடன், ஒரு குழந்தையை சாலையில் நின்று ஒரு மில்லியன் பவுண்டுகளுக்கு விற்க முயன்றதாக Claire மீது ஏற்கனவே ஒரு குற்றச்சாட்டும் உள்ளது.
ஆகவே, குழந்தைகளை மோசமான நிலையில் வைத்திருந்த அவர்களது பெற்றோர் மீது, குழந்தைகளை கவனிக்காமல் அலட்சியமாக நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

