விமானம் மூலம் பிரித்தானியா திரும்பிய ஆண்-பெண் தம்பதி செய்த தவறு! பெரும் அபராதம் விதித்த பொலிசார்! எச்சரிக்கை செய்தி
சிவப்பு நாடுகளின் பட்டியலில் இருந்து வரும் எவரும் தனிமைப்படுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறப்பட்ட நிலையில், அதை மீறிய ஆண் மற்றும் பெண் என இருவருக்கு பொலிசார் பெரும் அபராதம் விதித்துள்ளனர்.
பிரித்தானியா அரசு கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக பயணங்களில் கடுமைமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.
குறிப்பாக விமான வழிப் போக்குவரத்தில், கொரோனாவால் சிவப்பு பட்டியல் நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு கடுமையான விதிகள் உள்ளது.
இந்நிலையில், சமீபத்தில் துபாயில் இருந்து திரும்பிய ஆண் மற்றும் பெண் என இருவர் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள தவறியதால், அவர்கள் இருவருக்கும் தலா 10,000 பவுண்ட் அபராதம் பொலிசார் விதித்தனர்.
இது குறித்து செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், துபாயில் இருந்து திரும்பிய பின்னர் ஒரு ஆணும் பெண்ணும் தனிமைப்படுத்தத் தவறிவிட்டதாக கூறி, கடந்த செவ்வாய் கிழமை தங்களுக்கு அறிக்கை ஒன்று கிடைத்தது.
இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில், அவர்கள் கடந்த வெள்ளிக் கிழமை கண்டுபிடிக்கப்பட்டு, அவர்களுக்கு 10,000 பவுண்ட் அபராதம் விதிக்கப்பட்டதுடன், அவர்கள் ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், தலைமை ஆய்வாளர் கிறிஸ் பார்ன்ஸ் கூறுகையில், சர்வதேச பயணங்களில் இருந்து வருபவர்களுக்கு அரசு பல்வேறு விதிமுறைகளை நடைமுறைப்படுத்தியுள்ளன.
இதை புறக்கணிப்பது சுயநலமானது, சிந்திக்க முடியாதது மற்றும் ஆபத்தானது.
விதிமுறைகள் என்னவென்றால், நீங்கள் ஒரு பிரித்தானியர் அல்லது அயர்லாந்து நாட்டவர், அல்லது உங்களுக்கு பிரித்தானியாவில் வசிக்கும் உரிமை இருந்தால் மற்றும் வெளிநாட்டு பயண சிவப்பு பட்டியலில் ஒரு நாட்டிலிருந்து திரும்பி வருகிறீர்கள் என்றால், நீங்கள் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஹோட்டலில் 10 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட வேண்டும்.
நீங்கள் ஒரு ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்றால், நீங்கள் சில விமானநிலையங்களுக்கு மட்டுமே பிரித்தானியாவுக்கு வர முடியும்.
அதன் படி குறித்த, ஜோடி இந்த செயல்முறையைத் தவிர்ப்பதற்கான முயற்சியாக துபாயிலிருந்து குறிப்பிட்ட விமான நிலையங்களில் ஒன்றிற்கு நேரடி விமான வழியைத் தவிர்த்தது. இருப்பினும் இறுதியில் சிக்கிக் கொண்டனர்.
இதன் விளைவாக தலா ஒருவருக்கு 10,000 பவுண்ட் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இது பயண விதிமுறைகளை மீறுபவர்களுக்கு, தெளிவான செய்தியை அனுப்பும் என்று நம்புகிறேன், இந்த விஷயத்தைப் பொறுத்தவரை நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம்.
தொற்றுநோய்களின் ஒரு முக்கியமான கட்டத்தில் நாம் இருக்கிறோம், எல்லோரும் தொடர்ந்து கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம், என்று எச்சரித்துள்ளார்.

