இந்தியக் குடும்பத்தை ஏமாற்றி தப்பிய தம்பதி... விதியின் விளையாட்டு
லண்டனில் வசிக்கும் ஒரு தம்பதியர், தங்களுக்குப் பிள்ளையில்லை என்று கூறி, இந்தியாவுக்கு சென்று ஒரு சிறுவனை தத்தெடுத்தார்கள். ஆனால், அவன் பிரித்தானியாவில் கால்வைக்கும் முன்பே கொல்லப்பட்டான்.
பிள்ளையில்லை என்று கூறி இந்தியச் சிறுவனை தத்தெடுத்த தம்பதி
2015ஆம் ஆண்டு, லண்டனில் வசிக்கும் ஆர்த்தி தீர் (Arti Dhir, 55) அவரது கணவர் கவல் ரைஜதா (Kaval Raijada, 30) இருவரும், இந்தியாவுக்கு சென்று கோபால் செஜானி (11) என்ற சிறுவனை தத்தெடுத்துள்ளனர்.
ஆனால், பிரித்தானியா வரும் முன்பே, 207ஆம் ஆண்டு, இந்தியாவிலேயே படுகொலை செய்யப்பட்டான் கோபால். கொலையாளிகளைத் தடுக்க முயன்ற, கோபாலுடன் சென்ற அவனது அக்கா கணவரான Harsukh Kardani என்பவரும் தாக்கப்பட்டு பின் மருத்துவமனையில் உயிரிழந்தார். கொலையாளிகளை இந்தியப் பொலிசார் கைது செய்ய, அவர்களில் ஒருவர் ஆர்த்தி தம்பதியின் நண்பர் என்பதும், அவர் சில காலம் ஆர்த்தி குடும்பத்துடன் லண்டனில் தங்கியிருந்ததும் தெரியவந்தது.
திட்டமிட்ட சதி
பொலிசாரின் தீவிர விசாரணையில், ஆர்த்தி கவல் தம்பதி, கோபால் பெயரில் 150,000 பவுண்டுகளுக்கு காப்பீடு எடுத்திருந்ததும், அந்தக் காப்பீட்டுத் தொகைக்காக கோபாலைக் கொலை செய்ததும் தெரியவந்தது.
பிரித்தானியாவில் அவர்கள் கைது செய்யப்பட, அவர்களை இந்தியாவுக்கு நாடுகடத்துமாறு இந்திய அதிகாரிகள் கோரிக்கை வைத்துள்ளார்கள். ஆனால், தங்களை இந்தியாவுக்கு அனுப்பிவைத்தால் தங்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படும் என்றும், அது மனித உரிமைகளுக்கு எதிரானது என்றும் தம்பதியர் தரப்பு முன்வைத்த வாதத்தை ஏற்று அவர்களை இந்தியாவுக்கு நாடுகடத்த பிரித்தானிய நிதிபதிகள் மறுத்துவிட்டார்கள்.
தொலைபேசியில் வந்த செய்தி
கோபால் குடும்பத்தினர், தங்கள் பிள்ளையையும், Harsukh Kardaniயயையும் கொன்றவர்களுக்கு சரியான தண்டனை கிடைக்கவில்லை என ஏமாற்றமடைந்தனர்.
இந்நிலையில், கோபால் குடும்பத்தினருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. தொலைக்காட்சியை ஆன் செய்து செய்தியைப் பார்க்குமாறு ஒரு ஊடகவியலாளர் கூற, கோபால் குடும்பத்தினர் தொலைக்காட்சியை இயக்க, அதில் ஒரு செய்தி ஓடிக்கொண்டிருந்தது.
தங்கள் பிள்ளை கோபாலைக் கொலை செய்த ஆர்த்தி கவல் தம்பதிக்கு 33 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என்ற செய்தி கேட்டு, தங்களுக்கு நீதி கிடைத்துவிட்டதாக நிம்மதிப் பெருமூச்சுவிட்டுள்ளார்கள் கோபால் குடும்பத்தினர்.
விதியின் விளையாட்டு
ஆம், கோபால், Harsukh கொலை வழக்கில் ஆயுள் தண்டனைக்குத் தப்பிய ஆர்த்தி கவல் தம்பதியர், பிரித்தானியாவிலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு போதைப்பொருள் கடத்திய வழக்கில் சிக்கினார்கள். ஜனவரி மாதம் 29ஆம் திகதி, 700 மில்லியன் பவுண்டுகள் மதிப்புடைய போதைப்பொருளைக் கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட அவர்களுக்கு 33 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு, அவர்கள் இருவரும் சிறையிலடைக்கப்பட்டுள்ளார்கள். விதி வென்றுவிட்டது!
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |