பிரித்தானியாவில் வீட்டுக்குள் கண்டெடுக்கப்பட்ட பெண் மற்றும் ஆணின் சடலம்! இருவரும் தம்பதியா? வெளியான புகைப்படம்
பிரித்தானியாவில் உள்ள ஒரு கிராமத்து வீட்டில் கணவன் மற்றும் மனைவியின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
Polperro கிராமத்தில் உள்ள வீட்டில் ஒரு ஆண் மற்றும் பெண்ணின் சடலங்கள் கிடப்பதாக பொலிசாருக்கு தகவல் வந்தது. சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் உயிரிழற்ற நிலையில் கிடந்த இரு உடல்களை கைப்பற்றினார்கள்.
இருவரும் கணவன் மற்றும் மனைவியாக இருக்கலாம் என பொலிசார் கருதுகின்றனர். பொலிசார் கூறுகையில், 40களில் உள்ள பெண் மற்றும் 50களில் உள்ள ஆணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
இது தொடர்பாக அவர்களின் உறவினர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக தற்போது வரை யாரை தேடவில்லை.
இருவரின் இறப்புக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது. விரைவில் மேலதிக தகவல்கள் வெளிவரும் என கூறியுள்ளனர்.