திருமணமாகி 60 நாட்களில் விவாகரத்தா?
சின்னத்திரை நடிகர்களான விஷ்ணுகாந்த் மற்றும் சம்யுக்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து இருவரும் ஒன்றாக சேர்ந்து எடுத்த புகைப்படங்களை நீக்கியுள்ளனர்.
விஷ்னுகாந் மற்றும் சம்யுக்தா
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சிப்பிக்குள் முத்து என்ற சீரியலில் அபினவ் என்ற கதாபாத்திரத்தில் விஷ்ணுகாந்த் என்பவரும், பொன்னி என்கிற கதாபாத்திரத்தில் சம்யுக்தா என்பவரும் நடித்து வந்தனர்.
விஷ்ணுகாந்த் பல நாடங்களிலும், சம்யுக்தா நிறைமாத நிலவே என்னும் வெப் தொடரில் நடித்தும் ரசிகர்களை ஈர்த்துள்ளனர்.
விஷ்ணுகாந்த்- சம்யுக்தா திருமணம்
கடந்த வருடம் சம்யுக்தாவின் பிறந்தநாளன்று தான் விஷ்ணுகாந்த்தை காதலிப்பதாகவும், எல்லா குழப்பங்களுக்கும் நடுவில் நான் உன்னைக் கண்டேன். என் வாழ்வின் அனைத்து துன்பங்களையும் மகிழ்ச்சியாக மாற்றிய மனிதர் நீங்கள். நான் உங்களுடன் இருக்கும்போது என்னை நன்றாக உணர்கிறேன். என் வாழ்க்கையில் வந்ததற்கு மிக்க நன்றி என்று கூறி இருவரும் இருக்கும் படத்தை சமூகவலைத்தளங்களில் பதிவிட்டார்.
இந்நிலையில் ஒரு வருடம் கழிய, இருவரும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் செய்துள்ளனர். தனது திருமண புகைப்படங்களை பகிரந்து வந்த நிலையில், ரசிகர்களும் வாழ்த்துக்கள் கூறினர்.
இன்ஸ்டாகிராமில் நீக்கப்பட்ட படங்கள்,
இவ்வாறு இருக்கையில் தற்போது அவர்கள் இருவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து இருவரும் சேர்ந்து எடுத்த புகைப்படங்களை நீக்கியுள்ளனர். இதனால் அதிரச்சியடைந்த ரசிகர்கள் என்ன நடந்தது என்று கமெட் செய்து கேள்வி கேட்டு வருகின்றனர்.
ரசிகர்களின் கேள்விக்கு விஷ்னுகாந்து "விரைவில் எல்லாம் தெரியவரும்" என்று பதில் கொடுத்துள்ளார்.