லொட்டரியில் 12 மில்லியன் பவுண்டுகள் பரிசு பெற்றதை இரகசியமாக வைத்துக்கொண்ட பிரித்தானிய தம்பதி செய்துள்ள செயல்
பிரித்தானியாவில் வாழும் தம்பதியருக்கு லொட்டரியில் 12.4 மில்லியன் பவுண்டுகள் பரிசு கிடைத்துள்ளது.
அவ்வளவு பெரிய தொகை கிடைத்ததை வெளியில் சொல்லாமல் வைத்துக்கொண்டனர், Trafford என்ற இடத்தைச் சேர்ந்த Sharon மற்றும் Nigel Mather என்னும் அந்த தம்பதி. ஆனால், அவர்கள் தாங்கள் பரிசு பெற்றதை வெளியில் சொல்லாமல் வைத்துக்கொண்டது சுயநலத்தினால் அல்ல.
ஆம், தங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் 30 பேரை தேர்ந்தெடுத்து, ஆளுக்கொரு பெரும் தொகையை காசோலையாக எழுதி, அவர்களிடம் கொண்டு கொடுத்துவிட்டு வந்திருக்கிறார்கள் தம்பதியர்.
பரிசு விழுந்தது என்பதை வைத்து பந்தா காட்டுவது எங்களுக்கு பிடிக்கவில்லை, நமக்கு நெருக்கமானவர்களிடம் பொய் சொல்லாமல் அவர்களுக்கு உதவுவதற்காகத்தான் அப்படி இருந்தோம் என்கிறார் Sharon.