50 மீற்றர் பள்ளத்தில் விழுந்த கார்: பின்னர் நடந்த வியக்க வைக்கும் சம்பவம்
சுவிட்சர்லாந்தில் வாகனத்தில் சென்ற வயதான தம்பதி ஒன்று, இக்கட்டான சூழலில் 50 மீற்றர் பள்ளத்தில் விழ, அதிர்ஷ்டவசமாக இருவரும் உயிர் தப்பியுள்ளனர்.
சுவிட்சர்லாந்தின் Graubünden மாநிலத்தில் திங்களன்று மாலை சுமார் 4.30 மணியளவில் குறித்த சம்பவம் நடந்துள்ளது.
Graubünden மாநிலத்தின் Maladers பகுதி நோக்கி Valtoris பகுதி வழியாக மலைப்பகுதியில் பயணம் செய்துள்ளனர் 87 வயதான முதியவரும் 84 வயதான அவரது மனைவியும்
இந்த நிலையில், ஊசி வளைவு ஒன்றில், இக்கட்டான சூழலில் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையில் இருந்து விலகி 50 மீற்றர் பள்ளத்தில் விழுந்துள்ளது.
அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் தப்பிய அந்த சாரதியின் மனைவில், வாகனத்தில் இருந்து வெளியேறி, கணவரை காப்பாற்ற முயன்றுள்ளார்.
ஆனால் முடியாமல் போகவே, அங்கிருந்து உதவிக்கு கோரியுள்ளார். இதனிடையே விபத்து குறித்து அறிந்துகொண்ட நபர் உடனடியாக விரைந்து சென்று, சாரதியை வாகனத்தின் உள்ளிருந்து மீட்டுள்ளார்.
தகவல் அறிந்து வந்த Chur பகுதி மீட்புக்குழுவினர், விபத்தில் சிக்கி லேசான காயங்களுடன் தப்பிய இருவருக்கும் முதலுதவி அளித்து Graubünden மாநில மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
முற்றாக சேதமடைந்த அவர்களின் வாகனம் உரிய முறைப்படி அங்கிருந்து அகற்றப்பட்டது. மேலும், இந்த விபத்து தொடர்பில் Chur நகர பொலிசார் விசாரணை முன்னெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.